கரூர்:வீரணம்பட்டி கோவிலுக்கு சீல் - எதிர்ப்பு தெரிவித்து 2,000 பேர் கடவூர் தாசில்தார் ஆபீஸ் முற்றுகை
கரூர்: தலித்துகளை கோவிலுக்குள் வழிபாடு நடத்த அனுமதிக்கவில்லை என கூறி வீரணம்பட்டி காளியம்மன் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக தமிழ்நாடு ஊராளி கவுண்டர் சங்கத்தினர் 2,000 பேர் நேற்று கடவூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வீரணம்பட்டி காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வந்தது. அப்போது தலித் இளைஞர் சக்திவேல் என்பவரை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என கூறி இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அரசு அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டனர். இருதரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் ஏற்படாத நிலையில் அதிகாரிகள், வீரணம்பட்டி கோவிலுக்கு சீல் வைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அப்போது கோட்டாட்சியர் சிறை பிடிக்கப்பட்டார். 3 மணிநேரத்துக்கு பின் கோட்டாட்சியர் விடுவிக்கப்பட்ட போது அவரது வாகனம் சிறுமி மீது மோதி அவருக்கு கால் முறிந்தது. இது அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மேலும் அங்கு அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாத வகையில் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் வீரணம்பட்டி கோவில் சீல் வைக்கப்பட்டதை அகற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஊராளி கவுண்டர் சங்கத்தினர் சுமார் 2,000 பேர் கடவூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட நேற்று பேரணியாக சென்றனர். தரகம்பட்டி கடைவீதி, பேருந்து நிலையம் வழியாக இந்த பேரணி நடத்தப்பட்டது. ஆனால் கடவூர் தாசில்தார் அலுவலகம் அருகே இப்பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஊராளி கவுண்டர் சங்கத்தினர் 10 பேர் மட்டும் கடவூர் தாசில்தாரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

அதில், மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறி நடந்த நபரையே தாக்கியதாகவும் அதுவே ஜாதிய பிரச்சனையாக திசை திருப்பப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் வீரணம்பட்டி காளியம்மன் கோவில் அரசுக்கு சொந்தமானது அல்ல. தனியார் நிலத்தில் கட்டப்பட்டது. தனியாருக்கு சொந்தமான கோவில் நிலத்தில் மற்றொரு ஜாதியினர் உள்ளே நுழைந்து வழிபட எப்படி அனுமதிக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வீரணம்பட்டி சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications