அழுகுரல் ஏற்படுத்திய வலி நெஞ்சத்தை விட்டு அகலவில்லை! முதல்வர் ஸ்டாலின் வேதனை #KarurTragedy
கரூர்: இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை என முதல்வர் ஸ்டாலின் வேதனையுடன் ட்வீட் போட்டுள்ளார்.
நேற்று நாமக்கல்லில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு வந்திருந்த விஜய், தனது பிரச்சார பேருந்து மீது ஏறி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸுக்கு வழிவிட முயன்ற போது கூட்டநெரிசல் ஏற்பட்டது.

அப்போது நிறைய பேர் மயங்கி விழுந்தனர். விஜய் என்னாச்சு என கேட்டு அவர்களுக்கு தண்ணீர் பாட்டிலை போட்டுள்ளார். பின்னர் நிறைய பேர் மயங்கி விழவே தனது பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டு அவர் அங்கிருந்து கிளம்பினார்.
இந்த துயரத்தில் 39 பேர் பலியாகிவிட்டனர். இறந்தவர்களில் பெண் குழந்தைகள்- 5 பேர், ஆண் குழந்தைகள் 4 பேர், பெண்கள் 17 பேர், ஆண்கள் 13 பேர் என 39 பேர் ஆவர். இந்த தகவல் கிடைத்ததும் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.
கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர்
@V_Senthilbalaji , மாண்புமிகு அமைச்சர் @Subramanian_Ma
அவர்களையும் - மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.
அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்
@Anbil_Mahesh அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன்.
பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை… #KarurTragedy pic.twitter.com/Z9K2TZs7NW
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) September 28, 2025
கரூரில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தான விபரங்களை தெரிந்து கொள்ள, தொடர்பு கொள்ள வேண்டிய கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர உதவி மைய எண்கள்.. DOT 04324 256306, Watsapp 7010806322 வழங்கப்பட்டன.
இந்த நிலையில் இரவோடு இரவாக கரூர் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுவோரின் உடல்நிலையை கேட்டறிந்தார்.
இறந்தவர்களின் உடல்களுக்கும் அஞ்சலி செலுத்திய முதல்வர் தனது எக்ஸ்வலை தள பதிவில் இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை... என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications