"இறந்தவர்களுக்கு நியாயம்.. இருப்பவர்களுக்கு நீதி" - அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு வைரமுத்து வேண்டுகோள்
கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொள்ள அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அருணா ஜெகதீசனம் ஆணையத்திடம் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கடந்த 27 ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். ஏராளமான பெம்கள், குழந்தைகள், பொதுமக்கள் திரண்டிருந்த நிலையில் அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கரூர் துயரம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் கரூரில் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கவிஞர் வைரமுத்து அருணா ஜெகதீசன் ஆணையத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:
"கரூர்ச் சம்பவம் குறித்து
அரசு அமைத்திருக்கும்
தனிநபர் ஆணையத்தின் தலைவர்
நீதிபதி அருணா ஜெகதீசன்
அவர்களுக்கு
ஒரு வேண்டுகோள்
உயிரிழப்புக்கு ஆளான
41 குடும்பங்களிலும்
நீங்கள் ஆய்வு மேற்கொண்டிருப்பீர்கள்
அந்தக் குடும்பங்களில்
வேலை வாய்ப்புக்கு
வயதுடையவர்களையும்
கல்வி கற்கும்
வாய்ப்புடையவர்களையும்
அரசுக்கு நீங்கள்
அறிக்கையில் குறித்து
அறிவிக்க வேண்டும்
பலியானோர் பலரும்
அடித்தட்டு மற்றும்
நடுத்தட்டு வர்க்கத்து
நலிந்தவர்கள்தாம்
வேலைவாய்ப்பும் கல்வியுமே
அவர்களின்
மாபெரும் துயரத்துக்கு
மருந்தாக முடியும்
இறந்தவர்களுக்கு
நியாயம் செய்வதும்
இருப்பவர்களுக்கு
நீதிசெய்வதுமே அறமாகும்
இந்தப் பணியை
நீங்கள் இப்போதே முடித்திருந்தால்
அது சமூக தர்மமாகும்
உங்கள் அறிக்கை
பட்டழிந்தோர் கண்ணீரைத்
தொட்டுத் துடைக்கும்
சுட்டு விரலாகட்டும்"
என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications