பெற்றோரை வெட்டிய கும்பல்.. இறந்த அப்பா பாக்கெட்டிலிருந்து செல்போனை எடுத்து.. போனில் கதறிய குழந்தை

4 வயது குழந்தை முன்பே தம்பதி வெட்டி கொல்லப்பட்டனர்

Subscribe to Oneindia Tamil

கரூர்: அம்மா, அப்பா இருவரையும் 4 வயது குழந்தை முன்பே சரமாரியாக வெட்டி சாய்த்து ஒரு கும்பல்.. இதை பார்த்து மிரண்டு அழுத குழந்தை, ரத்த வெள்ளத்தில் சடலமாகி கிடந்த அப்பாவின் பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து டயல்ட் லிஸ்ட்டில் இருந்து சொந்தக்காரர்களுக்கு போன் செய்து அழுதபடியே தகவலை சொன்ன சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Recommended Video

    Lockdown crime: சொத்துக்காக பெற்றோரை வெட்டிய கும்பல்.. போனில் கதறிய குழந்தை

    நாளுக்கு நாள் லாக்டவுன் வன்முறை அதிகரித்தபடியே உள்ளது.. வழக்கமான சமயங்கள் போலவே ஊரடங்கு சமயத்திலும் கொலை, கற்பழிப்புகள் நடப்பது சர்வசாதாரணமாகி வருகிறது.

    விழுப்புரம் ஜெயஸ்ரீ சம்பவமே இன்னும் மனதை விட்டு அகலாத நிலையில் கரூர் மாவட்டத்தில் மற்றொரு பயங்கரம் நிகழ்ந்துள்ளது.. மணவாடியை அடுத்த அய்யம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் ரங்கநாதன்.. இவரது மனைவி தீபிகா.. ரங்கநாதன் ஏசி மெக்கானிக் வேலை பார்த்து வந்தார்.

     மனநிலை பாதிப்பு

    மனநிலை பாதிப்பு

    இவர்களுக்கு 4 வயது தீபிகா என்ற மகள் இருக்கிறாள். ரங்கநாதனின் அம்மா கண்ணம்மாவும் இவர்களுடன்தான் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு சற்று மனநிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு எல்லோருமே வீட்டில் இருந்தனர். வீட்டுக்கு வெளியே, கண்ணம்மா தூங்கி கொண்டிருந்தார்.. அப்போது மர்ம கும்பல் வந்து தம்பதியை அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளது.

     கண்ணம்மா

    கண்ணம்மா

    இவர்களை படுகொலை செய்த நேரம் கண்ணம்மாவும் அதை நேரில் பார்த்துள்ளார்.. ஆனால் அவருக்கு மனநிலை கோளாறு என்பதால் எதுவும் செய்யமுடியவில்லை. 4 வயது குழந்தையின் முன்பேயே ரத்த வெள்ளத்தில் பெற்றோர் சரிந்து விழுந்தனர்... ரத்தத்தை பார்த்து அலறிய குழந்தை என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துள்ளது.. பிறகு இறந்துபோன அப்பாவின் பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து, அதில் இருந்த டயல்ட் லிஸ்ட்ல் உள்ள நம்பரை பார்த்து சொந்தக்காரர்களுக்கு போன் செய்து சொல்லி இருக்கிறாள்.

     விசாரணை

    விசாரணை

    இதற்கு பிறகுதான் அனைவருக்கும் விஷயம் தெரிந்துள்ளது.. அதுமட்டுமல்ல, இவர்கள் வசிக்கும் பகுதியின் குடியிருப்புகள் தனித்தனியாகவும், வெகு தூரமாகவும் இருக்கின்றன.. அதனால் குழந்தை அழுதது கூட இவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.. இதற்கு பிறகு விசாரணை ஆரம்பமாகி உள்ளது.. தனிப்படைகள் அமைத்து, கொலையாளிகளை போலீசார் தேட ஆரம்பித்தனர்.

     3 பேர் சரண்

    3 பேர் சரண்

    கொலையை செய்தது ரங்கநாதனின் சித்தி மகன்கள் லோகநாதன், 31, பிரவீண், 26, கவுதமன், 24, ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவருமே குளித்தலை போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தனர். குடும்பத்துக்குள் சொத்து தகராறு ரொம்ப வருஷமாகவே இருந்து வந்துள்ளது.. அதனால்தான் சித்தி மகன்கள் 3 பேருமே சேர்ந்து அண்ணனுடன், அண்ணி தீபிகாவையும் சேர்த்து வெட்டி கொலை செய்துள்ளனர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+