செந்தில்பாலாஜி பூரண நலம் பெறணும்! பிரச்சனைகள் தீரணும்! கரூரில் ரத்த தானம் செய்த ஆதரவாளர்கள்!
கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜி அறுவை சிகிச்சை முடிந்து பூரண நலம் பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் அவரது ஆதரவாளர்கள் கரூரில் ரத்த தானம் செய்துள்ளனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் நடத்திய சோதனையில், இருதய ரத்த குழாயில் முக்கியமான இடங்களில் 3 அடைப்புகள் இருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து அவருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. காவேரி மருத்துவமனையில் ஓரிரு நாட்களில் அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அவரது மருத்துவக் குழு கவனித்து வருகிறது.
இதனிடையே செந்தில்பாலாஜி பூரண நலம் பெற வேண்டும் என்ற வேண்டுதலுடனும் அவருக்குள்ள பிரச்சனைகள் தீர வேண்டும் என்ற வேண்டுதலுடனும் நேர்த்திக்கடன்களை செய்ய ஆரம்பித்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள். அந்த வகையில் கரூரில் உள்ள ரத்த வங்கி ஒன்றுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் ரத்தம் கொடுத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் போது கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உட்பட யார் படமும் இல்லை என்பதும் ஒன் அண்ட் ஒன்லி செந்தில்பாலாஜி படத்தை மட்டுமே அவரது ஆதரவாளர்கள் வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவும், கருணாநிதியும் மருத்துவமனையில் இருந்தபோது என்ன பரபரப்பு ஏற்பட்டதோ அதே போன்று ஒரு பரபரப்பை செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் உருவாக்கியுள்ளார்கள்.
செந்தில்பாலாஜியை மட்டும் முன்னிறுத்தும் அவரது ஆதரவாளர்களின் நடவடிக்கைகளை, பரம்பரை பரம்பரையாக திமுகவில் இருந்து வருபவர்கள் வெகுவாக ரசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications