தேதியே இன்னும் வரல! கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் வேட்பாளரை அறிவித்த சீமான்! யார் இவர்?
கரூர்: நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்காத நிலையில் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 2024 ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் சில எதிர்க்கட்சி தலைவர்கள் முன்கூட்டியே பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றன. இந்த கருத்தை திமுகவின் எம்பி டிஆர் பாலு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் இப்போது இருந்தே தொடங்கி விட்டன. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் நோக்கத்தில் பாஜக செயல்பட்டு வருகிறது. அதேவேளையில் பாஜகவின் வெற்றி பயணத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
அதாவது பாஜகவின் என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ், தமிழ முதல்வர் முக ஸ்டாலினின் திமுக, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள், வைகோவின் மதிமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.
இதனால் தேசிய அரசியல் களமும், மாநில அரசியல் களமும் சூடுபிடித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க தமிழகத்தை பொறுத்தவரை கடந்த முறையை போல் மிகப்பெரிய கூட்டணியுடன் திமுகவும், பாஜக உள்பட மேலும் சில கட்சிகளும் அதிமுகவும் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க உள்ளது. மாறாக நாம் தமிழர் கட்சி மீண்டும் கூட்டணி ஏதுமின்றி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் களமிறங்க உள்ளது. மேலும் தொகுதி வாரியாக கட்சியை பலப்படுத்தும் பணியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் சீமான் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். அந்த வகையில் கரூரில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார். அப்போது அவர் ‛‛வரும் நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் கருப்பையா என்பவர் போட்டியிட வாய்ப்பளிப்பேன். அவருக்கு வாக்களிக்க வேண்டும்'' என்றார். இதன்மூலம் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக கருப்பையாவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.
இதன்மூலம் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள முழுமுனைப்பில் நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. மேலும் தற்போது கரூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கருப்பை கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெற்ற நிலையில் அதிமுக வேட்பாளர் தம்பித்துரை 2ம் இடம் பிடித்தார். மாறாக கருப்பையா 38,543 ஓட்டுகள் பெற்று 3ம் இடம் பிடித்து தோல்வியடைந்தார். இதையடுத்து மீண்டும் வரும் நாடாளுமன்ற தொகுதியில் கருப்பையாவை களமிறக்க உள்ளதாக நாம் தமிழர் சீமான் அறிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications