கரூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவருக்கு கொரோனா உறுதி.. தேர்வெழுத அனுமதி மறுப்பு!

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், தேர்வு மையத்துக்குள் அவரை அனுமதிக்க மறுத்துள்ளனர்.

நாடு முழுக்க கொரோனா பாதிப்பிற்கு இடையிலும் நீட் தேர்வுகள் நடக்க உள்ளது. இது மக்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பி உள்ளது. பல்வேறு மாநில அரசுகள் நீட் தேர்வுக்கு இதனால் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

NEET: Student who got positive for Coronavirus has not allowed inside the exam hall in Karur.

இன்று மதியம் 2 மணிக்கு நீட் தேர்வு நடக்க உள்ளது. மொத்தம் 3 மணி நேரம் தேர்வு நடக்க உள்ளது. நீட் தேர்வுக்கு வரும் மாணவர்கள் எல்லோருக்கும் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா காலம் என்பதால்., தேர்வு அறைக்கு மாணவர்கள் முன்பே வந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதோடு மாணவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்.மாணவர்கள் எல்லோரும் தண்ணீர் பாட்டில் மற்றும் சானிடைசர் கொண்டு வருவது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சோதனை செய்யப்பட நிலையில் இன்று தேர்வுக்கு முன் கொரோனா சோதனை முடிவு வெளியானது.

NEET: Student who got positive for Coronavirus has not allowed inside the exam hall in Karur.

கொரோனா உறுதியானதால் அவரை தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர். கரூர் வி.எஸ்.பி கல்லூரியில் நீட் தேர்வு எழுத இவர் வந்தார். அதிகாரிகள் மறுத்த நிலையில் மாணவர் தேர்வு மையத்திற்கு வெளியே நிற்க வைக்கப்பட்டுள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+