கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எஸ்.பி.யே சொல்லியும் டிஎஸ்பி கேட்கல.. நைட் நேரத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்.. பரபர கரூர்

கணவனை தன்னிடம் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டார்

Google Oneindia Tamil News

கரூர்: தன்னுடைய கணவருடன் தன்னை சேர்த்து வைக்க கோரி நர்சிங் மாணவி ஒருவர் கரூர் எஸ்பி அலுவலகம் முன்பு நைட் நேரத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், சிந்தாமணிபட்டி பகுதியை சேர்ந்தவர் ரேவதி.. இவர் நர்சிங் படித்து வருகிறார்... சசிகுமார் என்பவரை உயிருக்கு உயிராக விரும்பினார்.. அதேபோல சசிகுமாரும் ரேவதியை காதலித்தார்..

ஸ்டாலினுக்கு வந்த ஃபோன் கால்.. அடுத்தடுத்து 5 பேருக்கும்.. திங்கட்கிழமை என்ன செய்வது? கேசிஆர் பேச்சு ஸ்டாலினுக்கு வந்த ஃபோன் கால்.. அடுத்தடுத்து 5 பேருக்கும்.. திங்கட்கிழமை என்ன செய்வது? கேசிஆர் பேச்சு

3 மாதங்களுக்கு முன்பு, இவர்கள் 2 பேரும், யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துள்ளனர்.. ரகசியமாகவும் குடும்பம் நடத்தி உள்ளனர்..

 தாழ்த்தப்பட்டவர்

தாழ்த்தப்பட்டவர்

ஆனால், இதற்கு பிறகு, ரேவதி, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்று காரணம் காட்டி தவிர்த்தாராம் சசிகுமார்.. நாளடைவில் ரேவதியை கைவிட்டுவிட்டதாகவும் தெரிகிறது. இதனால், அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்த ரேவதி, சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கரூர் மாவட்ட எஸ்பி ஆபிசில் புகார் தந்திருக்கிறார்.. ஆனால், அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், டிஎஸ்பி காலம் தாழ்த்தி வந்ததாக சொல்லப்படுகிறது... இதனால், தன்மனு மீது நடவடிக்கை எடுக்காத டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரியும், சாதியை காரணம் காட்டி ஏமாற்றிய சசிகுமார் மீதும் வழக்கு பதியக்கோரியும், ரேவதி திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.

 திடீர் தர்ணா

திடீர் தர்ணா

அதே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு, இரவு நேரம் என்பதையும் பாராமல், அங்கேயே உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ரேவதியுடன் அவருடைய உறவினர்களும் அந்த நேரம் தர்ணாவில் ஈடுபட்டனர்.. பாதிக்கப்பட்ட ரேவதி சொல்லும்போது, "கரூரில் நர்சிங் படித்தபோது, சசிகுமாருக்கும் எனக்கும் காதல் ஏற்பட்டது... நாங்கள் கோவை சென்று திருமணம் செய்து கொண்டோம்.. இதற்குள் என்னுடைய அப்பா போலீசில் புகார் தந்தார்..

 எஸ்பி அதிரடி

எஸ்பி அதிரடி

அந்த புகாரின்பேரில், போலீசார் ஏன்னை மீட்டு வந்து, என் அப்பாவிடம் ஒப்படைத்தனர்.. ஆனால், சசிகுமார் என்னை மறுபடியும் அழைத்துக் கொண்டு, அவர் குடும்பத்தினரிடம் அழைத்து சென்றார்.. மாமியார் குடும்பத்தினர் என்னை திட்டி, அடித்து கொடுமைப்படுத்தினர்.. எனவே, அவர்களிடமிருந்து நான் தப்பி என் வீட்டிற்கு வந்துவிட்டேன்.. அவர்கள் மீது வழக்கு பதிய வேண்டும்.. சாதியை காரணம் காட்டி ஒதுக்கும் என் கணவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும்.. இதற்காகதான் போலீசில் புகார் தந்தேன்.. ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை..

 நைட் நேரத்தில் பரபரப்பு

நைட் நேரத்தில் பரபரப்பு

எஸ்பி உத்தரவுப்படி, குளித்தலை டிஎஸ்பி, வெள்ளியணை போலீஸ் ஸ்டேஷன் என பல நிலையங்களில் புகார் தந்தேன்.. எந்த நடவடிக்கையும் இல்லை... அதனால் இப்பொழுது எஸ்பி அலுவலகம் முன்பே தர்ணா போராட்டத்தை ஆரம்பித்து விட்டேன்" என்றார்.. நைட் நேரத்தில், ஒரு பெண் தன்னுடைய குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.. இதற்கு பிறகு, கரூர் சரக டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான போலீசார், சசிகுமார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக, உறுதி அளித்த பிறகே, ரேவதி தன் தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.

English summary
nursing student dharna at karur sp office and demanding to take action against her husband family கணவனை தன்னிடம் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X