Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூரை விடக்கூடாது.. திமுகவில் களமிறக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் நிழல்.. யாரு? அதிமுகவிற்கு தலைவலி

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரை விட்டு திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதிக்கு மாறி உள்ளார். இதனால் கரூர் மாவட்டத்தில் திமுகவின் தேர்தல் பணிகள் சுணக்கமடைந்தது. இந்நிலையில் தான் செந்தில் பாலாஜி தனது நிழலை களப்பணிக்கு இறக்கி விட்டு இருப்பது அதிமுகவினருக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 4 சட்டசபை தொகுதிகள் உள்ளனர். இது திமுகவின் கோட்டையாக உள்ளது. இந்த மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் (தனி) என்று மொத்தம் 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2021 சட்டசபை தொகுதிகளில் இந்த 4 தொகுதிகளிலும் திமுகவினர் தான் எம்எல்ஏவாக வெற்றி பெற்றனர்.

senthil-balaji-brother-ashok-kumar-stepped-in-to-oversee-campaign-work-across-karur-district

கரூர் தொகுதி எம்எல்ஏவாக திமுகவின் முன்னார் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் எம்எல்ஏவாக திமுகவின் இளங்கோ உள்ளார். இவர் அண்ணாமலையை வீழ்த்தி எம்எல்ஏவானார். குளித்தலை தொகுதியில் திமுகவின் மாணிக்கம் எம்எல்ஏவாக உள்ளார். கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்எல்ஏவாக சிவகாம சுந்தரி உள்ளார்.

இந்த தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக சார்பில் தியாகராஜனும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரும் போட்டியிடுகின்றனர். அரவக்குறிச்சி தொகுதியில் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏ இளங்கோ களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து செல்வக்குமார் என்பவர் களமிறங்கி உள்ளார்.

குளித்தலை தொகுதியில் தற்போது திமுகவின் சந்திரன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கருணாகரன் என்பவர் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். கிருஷ்ணராயபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் சிகே ராஜா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் திவ்யா என்பவர் களம் இறங்குகிறார்.

இந்நிலையில் தான் தற்போது செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் இருந்து கோவை தெற்கு தொகுதிக்கு மாறிவிட்டார். திமுகவில் கொங்கு மண்டல பொறுப்பாளராக செந்தில் பாலாஜி செயல்பட்டு வருகிறார். இதனால் அவர் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கி உள்ளார். கரூர் மாவட்டத்தில் திமுக பலமாக இருக்க செந்தில் பாலாஜி தான் காரணம். அவரது தேர்தல் பணி தான் 4 தொகுதிகளிலும் திமுகவினரை வெல்ல வைத்தது.

இப்படியான சூழலில் அவர் தற்போது தான் போட்டியிடும் கோவை தெற்கு உள்பட கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகள் மட்டுமின்றி ஈரோடு, திருப்பூர் உள்பட கொங்கு மண்டல மாவட்டங்களில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் கரூர் மாவட்ட அரசியலில் அவரால் முழு கவனத்தையும் செலுத்த முடியாத நிலை உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாட்டை செந்தில் பாலாஜி செய்துள்ளார். கரூர் தனது சொந்த மாவட்டம் என்பதால் தனது தம்பி அசோக் குமாரை அவர் தேர்தல் பணிகளுக்கு நியமனம் செய்துள்ளார்.

கரூர் தொகுதிகளில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளின் தேர்தல் பணிகளையும் ஒருங்கிணைப்பும் பொறுப்பை அவர் மேற்கொண்டு வருகிறார். இதனால் கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜி இல்லை என்று ஹேப்பியான அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பிற வேட்பாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அசோக் குமார், தேர்தல் களப்பணிகளில் அனுபவம் பெற்றவர். செந்தில் பாலாஜியின் நிழலாக இருந்து செயல்பட்டு வந்தவர். செந்தில் பாலாஜியின் வலதுகரமாக மறைமுகமாக வலம் வந்த அசோக் குமார் தற்போது நேரடியாக தேர்தல் களப்பணியில் இறங்கி உள்ளார். இதனால் கரூர் மாவட்ட திமுகவினர் ஹேப்பியாகி உள்ளனர்

செந்தில்பாலாஜி இல்லாததால் உரிய வழிகாட்டுதல் இல்லாமல் இருந்த கரூர் மாவட்ட திமுக தொண்டர்கள், இப்போது அசோக்குமாருக்கு பின்னால் அணிதிரண்டு பிரசாரங்கள், மக்கள் சந்திப்பு கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். இது அதிமுகவினரை கலங்க வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+