“வியூகம் தெரியாமல்.. எதிரிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்!” ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி பாராட்டு
கரூர்: "எதிரிகள் யாராக இருந்தாலும் எந்த வடிவில் வந்தாலும், எத்தனை பேராக வந்தாலும் வெற்றி நமக்குத்தான்! நாம்தான் ஜெயிக்கிறோம், நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்" என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக முப்பெரும் விழாவில் பேசியுள்ளார்.
அண்ணா பிறந்தநாள், தந்தை பெரியார் பிறந்தநாள், திமுக உதயமான நாள் என மூன்று பெரும் நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழாவை திமுக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. 1974ஆம் ஆண்டு முதல் இந்த விழாவை திமுக கொண்டாடி வரும் நிலையில், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி இந்த ஆண்டின் முப்பெரும் விழா முக்கியத்துவம் பெற்றுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா, கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சரும், திமுக கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி முன்னின்று மேற்கொண்டார். முப்பெரும் விழா ஒருங்கிணைப்பாளரான செந்தில் பாலாஜி இந்த விழாவில் வரவேற்புரை ஆற்றினார்.
செந்தில் பாலாஜி பேசுகையில், "திராவிட சூரியனான முதல்வர் கழகத் தலைவரை அன்புடன் வரவேற்கிறேன். உங்களின் வியூகம் என்னவென்று தெரியாமல், எதிரிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். உங்களுக்கு என்றும் நன்றிக்கு உரியவனாகவும் நன்றி மாறாதவனாகவும் இருப்பேன். புன்னகையால் அரவணைக்கும் புன்னகையால் எதிரிகளை ஓட ஓட விரட்டும் இளைய சூரியனை வரவேற்கிறோம். அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.
2026 தேர்தல் வெற்றிக்கணக்கை இங்கிருந்தே தொடங்குவோம். எதிரிகள் யாராக இருந்தாலும் எந்த வடிவில் வந்தாலும், எத்தனை பேராக வந்தாலும் வெற்றி நமக்குத்தான்! நாம்தான் ஜெயிக்கிறோம், நாம மட்டும்தான் ஜெயிக்கிறோம்! வெல்வோம் 200, படைப்போம் வரலாறு" என செந்தில் பாலாஜி பேசினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், செந்தில் பாலாஜியை புகழ்ந்தார். ஸ்டாலின் பேசுகையில், "மேற்கு மண்டலத்தில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளார் செந்தில் பாலாஜி. பொதுக்கூட்டம் என்று சொல்லிவிட்டு மாபெரும் எழுச்சி மாநாட்டை ஏற்பாடு செய்து இருக்கிறார் செந்தில் பாலாஜி. நாம கோடு போட சொன்னால் ரோடு போடுவார். ரோடு போட்டு அந்த ரோடு மேலதான் நான் வாகனத்தில் வந்தேன்.
செந்தில் பாலாஜி வெளியில் இருந்தால் தங்களால் நிம்மதியாக தூங்க முடியாது என்று அவரை முடக்கப் பார்த்தார்கள். ஆனால் அவரை முடக்க முடியுமா? எடுத்த பணியை வெற்றிகரமாக முடித்துக்காட்டுவார். நான் உறுதியாகச் சொல்கிறேன். கழக வரலாற்றில் இப்படியொரு பிரமாண்டமான முப்பெரும் விழா நடைபெற்று இருக்காது" எனப் பேசினார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications