ஹைவேஸில் திடீர்னு வந்த "நிர்வாண" சாமியார்.. கரூர் ரோட்டில் ஒரே கும்பல்.. யார் இந்த விசித்திர சித்தர்
: கரூர் ஹைவேஸில் உள்ள சாமியார் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது
கரூர்: கரூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீர் நிர்வாண சாமியார் பற்றிதான், ஒரே பேச்சாக இருக்கிறது.. யார் இந்த சாமியார்?
கரூர் அருகே ஒரு சாமியார் தோன்றி உள்ளார்.. மதுரை செல்லக்கூடிய ஹைவேஸில் அரவக்குறிச்சி அருகில், மலைக்கோவிலூர் பக்கத்தில் டிவைடர் என்ற பகுதி உள்ளது..
இங்குதான் அந்த சாமியார் ஒரு வருடத்துக்கும் மேலாக இருக்கிறார்... ஆனால், மலைக்கோவிலூர் பகுதியில் 8 வருடங்களுக்கு மேலாகவே இந்த சாமியாரை அந்த பகுதி மக்கள் பார்த்துள்ளார்களாம்.

வேப்ப மரம்
இவருக்கு மலைக்கோவிலூர் சித்தர், நெடுஞ்சாலை சித்தர் என்று பல பெயர்களும் உண்டு. இவர் ஒரு வித்தியாசமான சாமியார்.. எப்போதுமே நிர்வாணமாகத்தான் இருப்பாராம். உடம்பெல்லாம் விபூதி பூசிக் கொண்டு ஒரு வேப்பமரத்தின் கீழே உட்கார்ந்திருப்பார்.. ஒரு வருடமாகவே இதே வேப்ப மரம்தான் சாமியாரின் பிரதான இடம்.. மழை வந்தாலும் சரி, புயல் அடித்தாலும் சரி, இந்த இடத்தைவிட்டு அசைய மாட்டாராம். யாரிடமும் பேசவும் மாட்டாராம்.. இவர் பல வருடங்களாகவே மவுனம் பூண்டு வருவதாக சொல்கிறார்கள்..

ஹைவேஸ்
அப்படி இருந்தும் இவரை பற்றி கேள்விப்பட்டு, சுற்றுவட்டார பகுதி மக்கள், இவரை சித்தர் போல நினைத்து வழிபடுகிறார்கள்.. அதனால், தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், இதற்காகவே கிளம்பி வந்து இந்த நிர்வாண சாமியாரை பார்த்துவிட்டு போவார்கள்.. இவரை நேரில் சந்தித்துவிட்டு போனால், தங்கள் பிரச்சனைகள் தீர்கிறது என்றும் நம்புகிறார்கள். முக்கியமாக, வெளியூர்களுக்கு இந்த ஹைவேஸில் செல்ல நேரிட்டால், இவரை நேரில் சந்தித்துவிட்டு செல்வதால், பாதுகாப்பான பயணம் கிடைக்கிறது என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, இந்த ஹைவேஸில் இதுவரை எந்த சாலை விபத்தும் நடந்தது கிடையாதாம். அப்படி இருந்தும் இவரை பற்றி கேள்விப்பட்டு, சுற்றுவட்டார பகுதி மக்கள், இவரை சித்தர் போல நினைத்து வழிபடுகிறார்கள்.. அதனால், தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், இதற்காகவே கிளம்பி வந்து இந்த நிர்வாண சாமியாரை பார்த்துவிட்டு போவார்கள்.. இவரை நேரில் சந்தித்துவிட்டு போனால், தங்கள் பிரச்சனைகள் தீர்கிறது என்றும் நம்புகிறார்கள். முக்கியமாக, வெளியூர்களுக்கு இந்த ஹைவேஸில் செல்ல நேரிட்டால், இவரை நேரில் சந்தித்துவிட்டு செல்வதால், பாதுகாப்பான பயணம் கிடைக்கிறது என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, இந்த ஹைவேஸில் இதுவரை எந்த சாலை விபத்தும் நடந்தது கிடையாதாம்.

காணிக்கை
இதனால், நிறைய மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கிளம்பி வருகிறார்கள்.. தன்னை தேடி யார் வந்தாலும் விபூதியை பிரசாதமாக வழங்குகிறார்.. அதேசமயம், பணம், நகைகள் என விலை உயர்ந்த காணிக்கைகளை தந்தால் வாங்க மாட்டாராம்.. அப்படியே கையில் திணித்தாலும், தூக்கி தூர போட்டுவிடுகிறார்.. அதனால், இவரை காண வரும் பக்தர்கள், பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில், தேங்காய், பழம், இப்படி ஏதாவது தந்துவிட்டு போகிறார்கள்.. இதனால், அந்த பகுதி முழுக்க தண்ணீர் பாக்கெட்டுகள், பழங்கள் குவிந்து கிடக்கின்றன..

அருள்வாக்கு
இந்த சாமியார் இதே கரூரை சேர்ந்தவர்தானாம்.. ஒருகாலத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.. இவர் பெயர் சுப்பிரமணி.. குடும்ப பிரச்சினையால் நொந்து போய் இப்படி சாமியாராக உருமாறிவிட்டாராம்.. தமிழகத்தில் நிறைய சாமியார்கள், சித்தர்கள் இருந்தாலும் அருள்வாக்கு சொல்வார்கள்.. அதற்காகவாவது வாய் திறந்து பேசுவார்கள்.. ஆனால் இந்த சித்தர், வாயே திறக்காமல், விபூதி தந்து ஆசி வழங்கி வருவது வியப்பை தந்து வருகிறது.. அதுமட்டுமல்ல, லட்சக்கணக்கில் பணத்தை பிடுங்கி கொள்ளும் டுபாக்கூர் சாமியார்களுக்கு நடுவில், இப்படி ஒரு "சைலண்ட் சாமியார்" அதற்கு மேல் வியப்பை கூட்டி கொண்டிருக்கிறார்..!












Click it and Unblock the Notifications