விஜய் பிரச்சாரத்தில் கூட்டம் அதிகரிக்க காரணமே "அந்த" ட்வீட்தான்! பொறுப்பு டிஜிபி அறிக்கை
கரூர்: விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட்டம் அதிகரித்தது ஏன் என்பது குறித்து தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூரில் தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் பலியாகிவிட்டனர். அவர்களில் குழந்தைகள் 10 பேர், ஆண்கள் 12 பேர், பெண்கள் 17 பேர் என இறந்துள்ளனர்.

விஜய்க்கு வரவேற்பு கொடுத்த இடத்தில் இருந்து பலர் வாகனத்தை பின் தொடர்ந்து வந்ததால் கூட்டம் அதிரித்தது. விஜய் பேச ஆரம்பித்த போது காவல் துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்ததாக விஜய் நன்றி கூறியிருந்தார்.
தவெக விண்ணப்பத்தில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை நேரம் கேட்டிருந்தனர். தவெகவின் எக்ஸ்வலைதள பக்கத்தில் நண்பகல் 12 மணிக்கு கரூருக்கு விஜய் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்றைய தினம் கரூரில் சம்பவ இடத்தை ஆய்வு செய்த போது 10000 பேர் கூடுவார்கள் என்று சொல்லிதான் அனுமதி கேட்டார்கள். ஆனால் அந்த இடத்தில் 27 ஆயிரம் பேர் கூடிவிட்டனர். 10 ஆயிரம் பேர் என சொன்னதால் 500 போலீஸாரை பாதுகாப்பு பணிக்கு அனுப்பினோம்.
இதே இவர்கள் நிறைய பேர் என சொல்லியிருந்தால் அதற்கேற்ப போலீஸாரை அனுப்பியிருப்போம். விஜய்யை பார்க்க காலை முதலே காத்திருந்த மக்களுக்கு போதிய உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளுக்கு ஏற்பாடு செய்யவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிரச்சாரத்திற்கு அனுமதி பெற்ற போதே கூட்டத்தினரை முறைப்படுத்த வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்திய நிலையில், அதிகமானோர் விஜயின் வாகனத்தை பின் தொடர்ந்து நெரிசலை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பான கேள்விகளுக்கு இப்போது பதில் அளிக்க முடியாது என அவர் தெரிவித்திருந்தார்.
பகலிலேயே விஜய் பார்க்க கூட்டம் கூடியது. இதனால் வெயில் நேரத்தில் மக்கள் நீண்ட நேரமாக காத்திருந்ததால் நீர் சத்து குறைந்து தண்ணீர் இல்லாமல் பலர் மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications