Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூரில் விஏஓ.. தர்மபுரியில் அரசு வக்கீல்.. ஒரே நாளில் அடுத்தடுத்து இப்படி போய் சிக்கிட்டாங்களே

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.3000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் போக்சோ வழக்கை நடத்த ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு வக்கீலை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். தொழிலாளி புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டம்,குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சதீஷ் (36) இவர் தனது தாயார் வீரம்மாள் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இது சம்பந்தமாக அம்மாவிற்கு வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக சதீஷ் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலக சேவை மையத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.

vao Officer near Karur Government Advocate in Dharmapuri arrested for accepting bribe

இது குறித்து மகாதானபுரம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் பிரபு (46) என்பவர் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு சதீஷ் பலமுறை இழுத்தடித்து சான்றிதழ் வழங்காமல் வந்துள்ளார். சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.3000 லஞ்சம் கொடுத்தால் தான் சான்றிதழ் வழங்கப்படும் என நிர்வாக அலுவலர் தெரிவித்ததன் பேரில் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத சதீஷ் கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்திருந்தார். கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய மூவாயிரம் ரூபாய் நோட்டுக்களை சதீஷிடம் கொடுத்துள்ளனர்.

அலுவலகத்தில் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் பிரபு மூவாயிரம் லஞ்சம் வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கிராம நிர்வாக அலுவலர் பிரபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு நடந்த பாலியல் தொந்தரவு தொடர்பாக பொம்மிடி போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்திருந்தார்கள். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் அரசு வக்கீல் கல்பனா (வயது 55) ஆஜராகி வாதாடி வந்தார். இந்த வழக்கை நடத்துவதற்கு சிறுமியின் தந்தையான தொழிலாளியிடம் ரூ.15 ஆயிரம் கேட்டுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சிறுமியின் தந்தை தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து தர்மபுரியில் உள்ள அரசு வக்கீல் கல்பனா வீட்டிற்கு சிறுமியின் தந்தை சென்றுள்ளார். அங்கு ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை கல்பனாவிடம் வழங்கினார். அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார், அரசு வக்கீல் கல்பனாவிடம் லஞ்ச பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அரசு வக்கீல் கல்பனாவை கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+