காலில் விழுந்து அழுதாரு விஜய்.. கோடி கோடியாய் கொடுத்தாலும் பேத்திகள் வருவாங்களா? கதறிய தாத்தா!
கரூர்: சென்னை மாமல்லபுரத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தை சந்தித்து மன்னிப்பு கேட்டதாகவும், ஆறுதல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் தங்களது பேரப்பிள்ளைகள் திரும்ப வருவார்களா கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நேரில் சந்தித்த பின் தனது மருமகள் மற்றும் இரு பேரக்குழந்தைகளை இழந்த முதியவர் பேட்டி.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு ஆம்னி பேருந்துகள் மூலமாக வரவழைத்து நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அந்த வகையில், கரூர் தாந்தோணி மலை சிவசக்தி நகரை சேர்ந்த ஆனந்த ஜோதி என்பவர் மனைவி ஹேமலதா மற்றும் மகள்கள் சாய் லக்சனா, சாய் ஜீவா ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

கரூர் துயரம்
இந்நிலையில், ஆனந்த ஜோதியையும், அவரது குடும்பத்தினரையும் மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் உள்ள அறையில் தனியாக சந்தித்துள்ளார் விஜய். இந்த துயர சம்பவத்திற்கு பிறகு பெரும் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால் அவர் உடல் இளைத்து மெலிந்து காணப்பட்டுள்ளார். மன அளவில் அவர் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், அவரை காணவே தங்களுக்கு கஷ்டமாக இருந்ததாகவும், என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து மன்னித்து விடுங்கள் என்று கூறி ஆனந்த ஜோதியின் தாயார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு உள்ளார்.
விஜய் மன்னிப்பு
மேலும் உங்களுக்கு உதவிகள் ஏதும் தேவைப்பட்டால் தன்னிடம் தயங்காமல் கேளுங்கள் எந்த உதவியாக இருந்தாலும் நான் செய்து தருகிறேன் என்றும் கூறியதாகக் கூறப்படுகிறது. முன்பு வீடியோ காலில் பேசிய போது நேரில் சந்திப்பதாக கூறியிருந்த நிலையில் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தால், கூட அவரை தனிப்பட்ட முறையில் நாங்கள் சந்தித்திருக்க முடியாது என்றும் கூடவே கட்சியினர் மற்றும் போலீசார் இருந்திருப்பார்கள் என்றும், மேலும் காவல்துறை அனுமதி கிடைக்காத காரணத்தினால் கரூர் வர முடியவில்லை, அவர் காசு கொடுத்தார் என்பதற்காக போகவில்லை என்றும், மனிதாபிமான அடிப்படையிலும் அவருடன் போட்டோ எடுத்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் தான் அவரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றதாகவும், எங்களுக்கு பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும் தங்குவதற்கும் அனைத்து வசதிகளையும் அவர் ஏற்படுத்தி தந்தார் என கூறியுள்ளார் ஆனந்த ஜோதியின் தாயார்.
கரூர் உயிரிழப்பு
மேலும் முதலில் அவரிடம் தாங்கள் மன்னிப்பு கூறியதாகவும் குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என்று கூறிய போதிலும் குழந்தைகள் தங்கள் மீது உள்ள பாசத்தின் காரணமாக காண வேண்டும் என்ற ஆசையில் அவர்களை அழைத்து வந்ததாகவும், ஆனால் நீங்கள் வரும்போது இந்த துயர சம்பவம் நடந்து உள்ளது என்றும் கூறியபோது என்னை மன்னித்து விடுங்கள். இந்த சம்பவம் எனக்கு தெரியாது என்றும் கூறினார் விஜய். மேலும் சம்பவம் நடந்த போது மூன்று பேரையும் ஆம்புலன்சில் ஏற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் வசதிகள் ஏதுமில்லை எனவும் மீண்டும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனையில் கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.
விஜய் ஆறுதல்
ஆனால் செல்லும் வழியிலேயே தனது மனைவி மற்றும் இளைய மகள் இறந்து விட்டதாகவும் பெரிய மகள் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார். ஆனால் அரசு கல்லூரி மருத்துவமனையில் சுமார் 20 நிமிடங்கள் ஆகியும் எந்தவித சிகிச்சையும் அளிக்காததால் தனது பெரிய மகளையும் இழந்ததாகவும் விஜய் இடம் கூறியுள்ளார்.
விஜய் உதவி
மேலும் ஆனந்த ஜோதியின் தந்தை கூறுகையில்," விஜய் மிகவும் உடல் மெலிந்து மனக்கவலையில் இருந்தார். அவரை பார்க்கும்போதே தங்களது கஷ்டமாக இருந்தது. மனிதாபிமான அடிப்படையில் அவர் அழைத்ததின் பேரில் நேரில் சந்தித்தோம். நடந்த துயர சம்பவத்திற்கு அவர் கண்ணீர் மல்க மன்னிப்பு கூறினார். உங்கள் குடும்பத்திற்கு எந்த உதவியாக இருந்தாலும் கேளுங்கள் செய்து தருவதாகவும் கூறினார். கோடி கோடியாக பணத்தை கொடுத்தாலும் தங்களது பேரக் குழந்தைகளின் இழப்பிற்கு ஈடாகுமா" என அவர் கண்ணீர் மல்க கூறினார்.
-
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை -
தமிழ்நாட்டில் விஜய்.. தெலங்கானாவில் விஜய் தேவரகொண்டா! உற்று பார்க்கும் தெலுங்கு மக்கள்! என்ன மேட்டர் -
அவர்கள் தற்குறி அல்ல.. தவெகவின் அம்புக்குறி.. விஜய் ஆட்சி மீது பொறாமையால் விமர்சனம்.. லாரன்ஸ் பேட்டி -
"அதெப்படி ஒருத்தனை பார்த்தாலே அடிக்கணும்னு தோனும்" மாஸ்டர் மகேந்திரனை வெளுக்கும் மீம்ஸ்! -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்! -
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் அடுத்த நாள் பணியில் இருக்க முடியாது.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications