கரூரில் தம்பி மனைவியை பார்த்ததுமே.. மனித தன்மை அற்ற செயல்.. போகக்கூடாத இடத்தில் பிரபாகரன்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பாரதியார் நகரை சேர்ந்த பிரபாகரன் என்பவரின் மனைவி மாசிலாமணி.. இவருடைய தங்கை கீர்த்தனாவை, பிரபாகரனின் தம்பி திருமணம் செய்துள்ளார். ஒரே அக்காள் தங்கையை திருமணம் செய்திருந்தார்கள் அண்ணன் தம்பிகள். இந்நிலையில் வாங்கிய ரூ.10 ஆயிரம் கடனுக்கு வட்டி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் பிரபாகரன், தனது தம்பி மனைவியான கீர்த்தனாவை என்ன செய்தார் தெரியுமா?

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பாரதியார் நகர் இருக்கிறது. இங்கு குடும்பத்துடன் வசித்து வருபவர் பிரபாகரன் (வயது 32). கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாசிலாமணி 25 வயது ஆகிறது. பிரபாகரனின் தம்பி சரவணன் (28). இவர் மாசிலாமணியின் தங்கையான கீர்த்தனாவை (20) திருமணம் செய்திருக்கிறார்கள். சரவணன்-கீர்த்தனா தம்பதிக்கு 4 மாத ஆண் குழந்தை இருக்கிறது.

What did the man who asked his brother s wife for interest on a loan of 10000 in Karur do

சரவணன்-கீர்த்தனா தம்பதி அரவக்குறிச்சி அருகே உள்ள வெங்கல்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். சரவணனும், கீர்த்தனாவும் சேர்ந்து அரவக்குறிச்சி பாரதியார் நகர் பகுதியில் ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கீர்த்தனாவின் தந்தையான ஆறுச்சாமி, சரவணனின் தந்தை பெரியசாமியிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது தந்தை கொடுத்த ரூ.10 ஆயிரத்தை பிரபாகரன் தனது தம்பி மனைவியான கீர்த்தனாவிடம் கேட்டு வந்துள்ளார். இதனால் கடந்த 2-ந்தேதி இரவு ஆறுச்சாமி தான் வாங்கிய ரூ.10 ஆயிரத்தை பிரபாகரனிடம் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று முன்தினம் பிரபாகரன், கீர்த்தனாவை சந்தித்து ரூ.10 ஆயிரத்திற்கு வட்டி கேட்டாராம். இதனால் பிரபாகரனுக்கும், கீர்த்தனாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன் கத்தியை எடுத்து ஆட்டை அறுப்பது போல் கீர்த்தனாவின் கழுத்தை அறுத்தாராம். இதில் கீர்த்தனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து ஆறுச்சாமி கொடுத்த புகாரின்பேரில், அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து, பிரபாகரனை கைது செய்து, அரவக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+