பேங்க்ல வேலை செய்யுறேன்.. கவுண்டமணி காமெடி பாணியில் ரீல் விட்ட சவுமி! கதிகலங்கிய கரூர்! இத்தனை பேரா?
கரூர் : கரூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக அமைச்சர் பெயரை பயன்படுத்தி பல லட்சம் மோசடி செய்ததாக இளம் பெண்ணை கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், அப்பெண் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியில் வசித்து வருபவர் சௌமியா என்ற சபரி. இவர் மின்சாரத்துறை அமைச்சர் தனது உறவினர் என்று கூறி கரூர், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றி பல லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
காந்திகிராமம் பகுதியில் சௌமியா இருப்பது தெரியவந்து, அவரை கையும் களவுமாக பிடித்து பாதிக்கப்பட்ட பொதுமக்களே பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ள நிலையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோசடி பெண்
கரூர் குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சுகுமார், நகர காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ், ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பலரை அப்பெண் ஏமாற்றியுள்ளது தெரிவந்து இருக்கிறது. சிறுவயது முதலே ஆடம்பர வாழ்க்கையில் அதீத நாட்டம் கொண்ட சவுமியா மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதை வாடிக்கையாக கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். அவரது நடவடிக்கையை பிடிக்காமல் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

பல திருமணம்
இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறி ராமநாதபுரத்தில் ஒரு விடுதியில் தங்கியுள்ளார். அங்கு அவருக்கு ராஜேஷ் காவலருடன் பழக்கம் திருமணம் செய்துக் கொண்டார். அவர் மூலம் தனது வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொண்ட சவுமியா தனக்கு கணவர் மூலம் மேலிடத்தில் நல்ல பழக்கம் உள்ளது என்று கூறி மோசடி செயல்களில் ஈடுபட தொடங்கினார். பலபேரிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து 1 கோடி வரை மோசடி செய்துள்ளார். மேலும் தனது கணவரின் பணத்தை சுருட்டிக் கொண்டு அவரை கை கழுவினார். இதனிடையே மோசடி புகாரில் சிக்கி சிறைக்கு சென்று ஜாமினில் வெளியே வந்தார்.

மறுமணம் என மோசடி
பின்னர் சதீஷ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டு ஒரு சில மாதங்கள் மட்டும் குடும்பம் நடத்திய சவுமியா அவரை கழற்றி விட்டுள்ளார். அதன்பின்னர் சவுமியா கரூர் காந்தி கிராமம் பகுதியில் குடியேறினார். அங்கும் தனது கைவரிசையை காட்டத்தொடங்கிய அவர் உச்சகட்டமாக தான் ஒரு வங்கியில் மேலாளராக பணிபுரிவதாகவும், கணவனை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், மறுமணம் செய்துக் கொள்ள இருப்பதாக கூறி பலரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

லட்சக்கணக்கில் அபேஸ்
இதனை நம்பிய பக்கத்து வீட்டு பெண் ஒருவர் தனது உறவினரான ஆட்டோ ஓட்டுனர் சிவக்குமாருக்கு சவுமியாவை திருமணம் செய்து கொடுக்க ஏற்பட்டு செய்தார். இதனையடுத்து தனக்கு அமைச்சரை நன்கு தெரியும் அவர் மூலம் சிவக்குமாருக்கு வேலை வாங்கி தருவதாகவும் முன் பணமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதனை நம்பி சிவக்குமார் குடும்பத்தினர் 10 ஆயிரம் பணத்தை சவுமியாவிடம் முன்பணமாக கொடுத்துள்ளனர். மேலும் தங்களது உறவினர்கள், நண்பர்கள் என 20 நபர்களுக்கு அரசு வேலை பெறுவதாக முன்பணமாக 10 லட்சம் ரூபாய் வரை சவுமியாவிடம் கொடுத்துள்ளனர்.

அதிரடி கைது
இதனிடையே சவுமியாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அவர் குறித்து விசாரித்தனர். அப்போது அவர் கூறிய அனைத்தும் பொய் என தெரியவந்துள்ளது. கரூரில் வீட்டு உரிமையாளரை சிவக்குமார் சந்திக்கும் போது அவரும் 15 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிவக்குமார் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சவுமியா தங்கி இருக்கும் வீட்டின் உள்ளே சென்று அவரை குண்டு கட்டாக தூக்கி ஆட்டோவில் ஏற்றி பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சவுமியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications