கரூரில் கையும் களவுமாக சிக்கிய சேலம் பூங்கொடி.. கையில் தங்க காசு.. ஆனந்த் கொடுத்த அல்வாதான் ஹைலைட்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை சாய்பாபா கோவில் தெருவை சேர்ந்த ஆனந்த் என்பவர், குளித்தலை பஜனை மட தெரு பகுதியில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த பெண் ஒருவர் தாலி சங்கிலியில் கோர்த்து வைக்கக்கூடிய தங்க காசுகள் தன்னிடம் இருப்பதாகவும், குறைந்த விலைக்கு அவற்றை தருவதாகவும் கூறி உள்ளார்.. ஆனால் அந்த தங்க காசை பார்த்த உடன் சந்தேகப்பட்ட ஆனந்த் போலீசுக்கு தகவல் தந்தார்.. இறுதியாக நடந்தது பற்றி பார்ப்போம்.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிவேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது தங்கத்தை வைத்து ஏமாற்றுவது அதிகரித்து வருகிறது. அண்மையில் பெங்களூரில் பெண் ஒருவரிடம் ஒரு கோடி ரூபாய் வரை ஏமாற்றினார்கள்..

பெங்களூர் கே.ஆர்.புரம் அருகே சாய் லே-அவுட் பகுதியில் தொழில் அதிபரின் மனைவியான அமராவதி என்பவர் 2024ம் ஆண்டு தனது வீட்டில் இவர் ஒருமுறை அமைதி பூஜை என்ற பெயரில் ஒரு பூஜை ஒன்றை நடத்தினார். இந்த பூஜையில் கோபால கிருஷ்ணா என்பவர் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தங்க நகை வியாபாரி எனக்கூறி அமராவதியிடம் அறிமுகமான கோபால கிருஷ்ணா, சில நாட்கள் கழித்து ராகேஷ் ரெட்டி என்பவருடன் அமராவதி வீட்டுக்கு போனாராம்.

woman arrested for trying to sell fake gold coins in Kulithalai Karur district

அப்போது ராகேஷ் ரெட்டியிடம் ரூ.300 கோடிக்கு அமெரிக்க டாலர் இருக்கிறது என்றும், அதன் மூலம் தங்க கட்டிகள் வாங்கி வியாபாரம் செய்ய உள்ளதாகவும், உங்களுக்கு தேவைப்பட்டால் ஒரு கிராம் தங்கத்தை ரூ.4 ஆயிரத்துக்கு கொடுப்பதாகவும் அமராவதியிடம் கோபால கிருஷ்ணா ஆசை வார்த்தை கூறி அமராவதியை ஏமாற்றினாராம்.

பின்னர் கோபாலகிருஷ்ணா, ராகேஷ் குமார் உள்பட 4 பேர் தங்களிடம் இருந்த ஒரு தங்க கட்டியையும் அவரிடம் காண்பித்துள்ளார்கள். அந்த தங்க கட்டியை தான் நகைக் கடைகளுக்கு விற்று வருவதாக கூறி சில ஆதாரங்களையும் அமராவதியிடம் காட்டியதை கண்டு ஏமாந்த அமராவதி, அவர்களிடம் இருந்து ஒரு கிராம் ரூ.4 ஆயிரம் விலையில் தங்க கட்டிகள் வாங்கி கொள்ள ஆசைப்பட்டுள்ளார்.

இதற்கு முன் பணமாக ரூ.1 கோடியையும் கோபாலகிருஷ்ணா உள்ளிட்டோரிடம் அவர் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை வாங்கிய அவர்கள், அமராவதிக்கு தங்க கட்டிகளை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தங்க கட்டிகள் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கி விட்டதாக கூறி காலம் கடத்தி ஏமாற்றி உள்ளார்கள். இந்த சம்பவம் தற்போது போலீஸ் விசாரணையில் இருக்கிறது.

இந்நிலையில் கரூர் மாவட்டம் குளித்தலையில், பெண் ஒருவர் போலி தங்க நாணயம் கொடுத்து ஏமாற்ற முயன்று கையும் களவுமாக சிக்கியுள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை சாய்பாபா கோவில் தெருவை சேர்ந்த 34 வயதாகும் ஆனந்த் என்பவர், குளித்தலை பஜனை மட தெரு பகுதியில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த பெண் ஒருவர் தாலி சங்கிலியில் கோர்த்து வைக்கக்கூடிய தங்க காசுகள் தன்னிடம் இருப்பதாகவும், குறைந்த விலைக்கு அவற்றை தருவதாகவும் கூறியிருக்கிறார். அந்த தங்க காசுகள் போலியாக இருப்பதை அறிந்த அவர் இதுகுறித்து குளித்தலை போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டியை சேர்ந்த பூங்கொடி (34) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த போலி தங்க காசுகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+