கையில் வீச்சரிவாள்.. வாய் நிறைய பச்சை பச்சையாய்.. நடுரோட்டில் இளைஞர் ரகளை.. யாருக்காக தெரியுமா?
நடுரோட்டில் குடிபோதையில் இளைஞர் தகராறு செய்துள்ளார்
Recommended Video
கரூர்: கையில் வீச்சரிவாள்.. வாய் நிறைய பச்சை பச்சையாய் கெட்ட வார்த்தைகளுடன்.. நடுரோட்டில் நின்று ரகளை செய்கிறார் ஒரு இளைஞர்.. சசிகலாவை விடுதலை செய்ய போறீங்களா? இல்லையா என்றும் ரோட்டில் சென்று கொண்டிருந்த வாகனங்களை வழிமறித்து கேள்வி எழுப்பி அட்டகாசம் செய்த இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர், திடீரென கையில் கோடாரி, வீச்சரிவாளை தூக்கி வந்தார்.. வரும்போதே தள்ளாடிக் கொண்டுதான் வந்தார்.. அது பிரதான சாலை என்பதால், பஸ், லாரி, டூவீலர்கள் சென்று கொண்டிருந்தன.

ஆபாச வார்த்தை
நடுரோட்டில் இவர் வந்து நின்று கொண்டார்.. ஆபாச வார்த்தைகளில் திடீரென எல்லாரையும் திட்ட ஆரம்பித்தார்... ஒரு இடத்தில் நிற்காமல், ரோட்டின் மையப்பகுதியிலேயே சுற்றி சுற்றி வந்தார்.. ஆத்திரம் ஆத்திமாக பேசினார்.

ரகளை
கோபத்தில் வீச்சரிவாளையும், கோடாரியையும் தூக்கி வீசி எறிந்தார்.. திரும்பவும் கீழே விழுந்ததை எடுத்து கையில் வைத்து கொண்டு மறுபடியும் கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தார். இவர் எதற்காக இப்படி ரகளை செய்கிறார் என்று பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் புரியவில்லை.

சசிகலா விடுதலை
பிறகுதான் சசிகலாவை விடுதலை செய்ய போறீங்களா, இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.. பஸ், லாரி, டூவீலர்களில் சென்றவர்களை நிறுத்தி கேள்வி கேட்டார். இதை பார்த்ததும் பொதுமக்கள் அலறி ஓடினர்.. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் இந்த அட்டகாசம் நடுரோட்டில் செய்து கொண்டிருந்தார்.. இதனால், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், அரை மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசாரும் அந்த பகுதியில் இருந்தார்களா என தெரியவில்லை.

விசாரணை
கொஞ்ச நேரத்தில், இளைஞருக்கு பளார் என்று ஒரு அடி விழுந்தது.. இளைஞரை அடித்தது அவரது சகோதரராம்.. 4 அடி அங்கேயே போட்டு, இழுத்துகொண்டு இளைஞரை கொண்டு போனார்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி வீச்சரிவாளுடன் அமர்க்களம் செய்த இளைஞரை போலீசார் தேடி வருகிறார்கள்!
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications