கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஸ்மைல்" சவும்யா.. முதல்ல சுரேஷ்.. 2வது சக்தி.. 3வது சீனிவாசன்.. மாஜி பேர் சொல்லி கோடி அள்ளிய லேடி

பணமோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்

Google Oneindia Tamil News

கரூர்: இளைஞர்களை ஏமாற்றியே கோடிக்கணக்கில் பணம் கறந்துள்ளார் சவும்யா என்ற பெண்.. மாஜி அமைச்சர் ஒருவரின் பெயரை சொல்லியே இத்தனை மோசடிகளையும் அந்த பெண் செய்துள்ளது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

கரூரை சேர்ந்தவர் சுரேஷ்... மணிமுத்தாறில் போலீஸாக இருக்கிறார்.. இவர் சவும்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்...

சவும்யாவின் உறவினர் விஜய்.. இவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக சவும்யா சொல்லி உள்ளார்.. தனக்கு கரூரை சேர்ந்த மாஜி அமைச்சர் ஒருவர் பழக்கம் என்றும், அவரிடம் சொன்னால் அடுத்த நிமிஷமே வேலை ரெடியாகிவிடும் என்றும் கலர் கலராக அடுக்கி உள்ளார்.

 இப்படியும் நடக்குமா..கல்லூரி மாணவர் சேர்க்கையில் கல்லா கட்டும் நூதன மோசடி! பெற்றோர்களே உஷார், உஷார் இப்படியும் நடக்குமா..கல்லூரி மாணவர் சேர்க்கையில் கல்லா கட்டும் நூதன மோசடி! பெற்றோர்களே உஷார், உஷார்

சவுமியா

சவுமியா

இதை நம்பிய விஜய், வேலை வாங்கி தருவதற்காக பணம் தந்துள்ளார்.. அத்துடன் தனக்கு தெரிந்தவர்கள், சொந்தக்காரர்களிடமும் அரசு வேலை கிடைக்கும் என்று நம்பிக்கை தந்து பணம், நகைகளை வாங்கி சவுமியாவிடம் தந்துள்ளார். அந்தவகையில் விஜய் மட்டும் 15 சவரன் நகைகளை சவுமியாவிடம் தந்துள்ளார்.. இதைதவிர வேலை கேட்ட மற்றவர்களின் 60 சவரன் நகை, 30 லட்சம் ரூபாய் என 50 லட்சம் ரூபாயை, சவுமியாவிடமும், உறவினர் சதீஷிடமும் தந்துள்ளனர்..

நகைகள்

நகைகள்

ஆனால், சதீஷும், சவுமியாவும் நகை, பணத்தை ஆட்டைய போட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சவுமியாவின் கணவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளார்.. ஆனால், தன் மனைவி தன்னை விட்டு பிரிந்து போய் நாளாகிவிட்டது என்று சொல்லி உள்ளார்... இதையடுத்து, சவுமியா, சதீஷ், சுரேஷ் ஆகிய 3 பேர் மீதும், ராமநாதபுரம் போலீசில் புகார் தரப்பட்டது.. இந்த விஷயம் தெரிந்து சவுமியா தலைமறைவானார்.. தீவிரமான தேடுதல் வேட்டைக்கு பிறகு, சேலத்தில் போலீசார் கண்டுபிடித்தனர்.

மோசடி

மோசடி

சவுமியா தன்னுடைய 3வது கணவர் சீனிவாசன் வீட்டில் பதுங்கி இருந்திருக்கிறார்.. சவுமியாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணையும் ஆரம்பமானது.. அப்போதுதான், சவுமியாவுக்கு இதுதான் முழு நேர வேலை என்பது தெரியவந்துள்ளது.. இளைஞர்களுடன் நெருங்கி பழகுவாராம்.. கல்யாணமும் செய்து கொள்வாராம்.. பிறகு கணவனின் சொந்தக்காரர்களுக்கு குறி வைத்து, பண மோசடியில் இறங்குவாராம். இப்படியே கோடிக்கணக்கில் ஏமாற்றி உள்ளார் சவுமியா.

 வங்கி கணக்கு

வங்கி கணக்கு

முதல் கணவன் சுரேஷ், 3வது கணவன் சீனிவாசன், 2வது கணவன் பெயர் சக்தி.. வேலை வாங்கி தருவதாக சொல்லி பெறப்படும் பணத்தை சவுமியா கை நீட்டி வாங்கியதில்லையாம்.. 2வது கணவர் சக்தியின் அக்கவுண்ட் நம்பரைதான் எல்லாருக்கும் தந்துள்ளார்.. அதாவதுதன் வங்கி கணக்கில் பணம் போடாதவாறு கவனமாக பார்த்து கொண்டார்.. இதனால் சவும்யா மீது யாராலும் புகார் தர முடியாத நிலைமை ஏற்பட்டது. சில வீடுகளில் திருட்டில் கூட சவும்யா ஈடுபட்டுள்ளாராம்.

கைது

கைது

ஆனால், இத்தனை மோசடிகளின் பின்னணியில் இருப்பது முதல் கணவன் சுரேஷ்தானாம்.. இவர்தன் ஐடியா போட்டு தருவாராம்.. யாரை பார்த்தாலும் சிரித்து சிரித்து பேசி சாமயர்த்தியமாக தன் வலையில் விழ வைத்துவிடுவாராம் சவும்யா.. இப்போது சுரேஷ் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு கைது நடவடிக்கை எடுக்க போவதாக தெரிகிறது...!

English summary
Young woman arrested in Cheating case near Karur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X