சிக்கன் கடை ஓனருடன் ஆசிரியை ‘குரூப் ஸ்டடி’.. மரத்தில் ஏறி எட்டி பார்த்த கணவன்! கிறுகிறு கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தனது காதல் மனைவி வேறொருவருடன் குடும்பம் நடத்தி வருவதாக பகீர் புகார் அளித்திருக்கிறார் காதல் கணவர். மேலும் கள்ளக்காதலனுடன் மனைவி தனிமையில் இருப்பதை அறிந்து வீட்டுக்கு பூட்டு போட்டதோடு, போலீசாரை வரவழைத்து பஞ்சாயத்து செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பலர் இறுதிவரை மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா என்றால் அது கேள்விக்குறி தான். காதலிக்கும் போது ஜாதி, மதம், பணம் என எதுவுமே தேவையில்லை என நினைக்கும் சில காதலர்கள் திருமணத்திற்கு பிறகு இதில் ஒவ்வொன்றும் முக்கிய தேவை எனக்கு கருதி வாழ்வில் இருந்து பிரிந்து சென்று விடுகின்றனர்.

அவ்வாறு செல்லும் போது மேலும் பல பிரச்சனைகள் எழுவதும், திருமணம் தாண்டிய உறவுக்கு செல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் கிருஷ்ணகிரியில் அரங்கேறி இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரும் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்பவரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி காலத்திலேயே காதல் செய்து வந்துள்ளனர். தொடர்ந்து காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இரு குழந்தைகள் உள்ள நிலையில், தொடர்ந்து தம்பதிகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் சங்கீதாவுக்கு அரசு பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்துள்ளது.
ஆனால் பழனிவேல் 15000 சம்பளத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார். அரசு வேலை பார்க்கும் சங்கீதா 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நிலையில் பழனிவேலுக்கு வெறும் 15000 ரூபாய் தான் ஊதியம் பெறுகிறார் என இருவருக்கிடையே பிரச்சனை எழுந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் இதுவே அவர்களது பிரிவுக்கு காரணமாக வந்திருக்கிறது. தொடர்ந்து இருவரும் அடிக்கடி சண்டையிட்டு கொண்ட நிலையில் சங்கீதா வாடிப்பட்டியில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு சென்று இருக்கிறார்.
அப்போது சிக்கன் கடை நடத்தி வரும் தினேஷ் குமார் என்பவர் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து தாய் வீட்டில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து திருமணம் தாண்டிய உறவில் இருந்துள்ளனர். இதனை தெரிந்து கொண்ட பழனிவேல், தொடர்ந்து சங்கீதாவை கண்காணித்து வந்துள்ளார். அப்போது இருவரும் பழகி வருவதை உறுதி செய்துவிட்டு இது குறித்து தனது உறவினர்களை அழைத்துச் சென்று பிரச்சனை செய்துள்ளார்.
அப்போது அரசு பள்ளியில் வேலை பார்க்கும் தான் 15,000 சம்பளம் வாங்கும் பழனிவேலுடன் வாழ முடியாது எனவே நான் டைவர்ஸ் செய்து விடுகிறேன் எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். ஆனால் காதலித்து கரம் பிடித்த மனைவியை விட முடியாது என பழனிவேல் உறுதியாக நிற்க இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சிக்கன் கடை தினேஷ்குமார் சங்கீதாவின் வீட்டுக்கு வந்து தனிமையில் இருப்பதை பார்த்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல தினேஷ்குமார் சங்கீதாவின் வீட்டுக்கு வர, பழனிவேல் மரத்தில் ஏறி எட்டிப் பார்த்து இருவரும் தனிமையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்ததோடு அவர்களை வீட்டுக்குள்ளேயே வைத்து பூட்டி உள்ளார். மேலும் இது தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரர்களையும் காவல் துறையினரையும் அழைத்து புகார் தெரிவித்து இருக்கிறார்.
அப்போது வெளியே வந்த சங்கீதா தான் பழனிவேலுக்கு டைவர்ஸ் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் டைவர்ஸ் வழங்காத நிலையில் வேரு ஒருவருடன் மனைவி இருப்பது எப்படி நியாயம் என கேட்டு பழனிவேல் புலம்பினார். இவ்வளவு நடந்தும் தினேஷ்குமார் வீட்டின் அறைக்குள்ளேயே இருந்தது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து உள்ளே இருந்த தினேஷ்குமாருடன் தொலைபேசியில் பேசிய போலீசார் அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications