கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அனைத்து கிராமத்திலும் பாமக கொடி பறக்கனும்! இனி நீங்க பார்க்க போறது PMK 2.0! பீஸ்ட் மோடில் அன்புமணி

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி : "ஒரு மாதத்தில் அனைத்து கிராமத்திலும் பாமக கொடி பறக்க வேண்டும், புதிய திட்டங்கள் வேண்டும் என்றால்,பாமக ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் எனவும், இனி நீங்கள் பார்க்க இருப்பது பாமக 2.0 என அக்கட்சியில் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாட்டாளி கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் இளைஞரணி தலைவரும், மாநிலங்களை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு நிர்வாகிகளிடையே சிறப்புரை ஆற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், " ஆளுநரும் தமிழக அரசும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் தமிழகத்திற்கு வளர்ச்சி கிடைக்கும். தமிழக அரசு என்பது மக்களுடைய உணர்வுகள் மக்கள் எல்லாம் ஜனநாயக முறையில் வாக்களித்து ஒரு அரசை தேர்வு செய்து இருக்கின்றார்கள்.

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

அந்த அரசு அந்த அரசின் மீது ஆளுநரும் அந்த அரசை மதித்து அதே நேரத்தில் அரசும் ஆளுநரை மதிக்கவேண்டும் இவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது. அப்படி ஒரு பிரச்சினை வந்தால் இது தமிழகத்திற்கு தான் பாதகம். காரணம் சட்டமன்றத்தில் எந்த சட்டத்தை நிறைவேற்றினாலும் அது ஆளுநர் மூலமாகத்தான் மத்திய அரசுக்கு அனுப்ப முடியும் இது தேக்க நிலையிலேயே இருக்க கூடாது. அதே நேரத்தில் மாநில அரசின் உரிமைகள் பல இருக்கிறது அந்த உரிமைகளை ஆளுநரும் மத்திய அரசு எடுத்துக் கொள்ளக் கூடாது.

தமிழக ஆளுநர்

தமிழக ஆளுநர்

ஆளுநர் என்பவர் இப்போது இருக்கின்ற சூழ்நிலையில் பல பல்கலைக்கழகங்களின் வேந்தர் அந்த அடிப்படையிலே அந்த அடிப்படையிலேயே துணைவேந்தர்களை அழைத்து பேசியிருக்கிறார் ஆனால் தமிழகத்தில் சட்டமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது அதில் துணைவேந்தர்கள் தமிழக அரசு நியமனம் செய்யலாம் என்று ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது இதே நிலை குஜராத்தில் ஹரியானாவில் ஆந்திராவில் உள்ளது. இந்த மசோதாவை பாமக வரவேற்கிறது.

இளைஞர்களுக்கு வாய்ப்பு

இளைஞர்களுக்கு வாய்ப்பு

பாட்டாளி மக்கள் கட்சியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தற்போது புதிதாக பொறுப்பேற்ற இருக்கிறார்கள். அது மட்டுமல்ல கட்சிக்குள் சீர்திருத்தங்கள் நடத்தப்பட்டு வருகிறது கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு நீக்கி இருக்கிறோம். கிட்டத்தட்ட 90 விழுக்காடு மாவட்ட செயலாளர்கள் எங்கள் கட்சியில் இளைஞர்களாக உள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் கட்சியில் அதிக அளவு இளைஞர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது . அடுத்த கட்டமாக புதிய உத்திகள் புதிய வியூகங்கள் புதிய செயல் திட்டங்களை இளைஞர்கள் மூலமாக மக்களை சென்றடைய நாங்கள் திட்டமிட்டு உள்ளோம்.

பாமக 2.0

பாமக 2.0

ஒரு மாதத்தில் அனைத்து கிராமத்திலும் பாமக கொடி பறக்க வேண்டும், 55 ஆண்டுகள் தமிழகத்தை 2 கட்சிகள் மட்டும் மாறி மாறி ஆட்சி செய்கிறார்கள். இதனால் ஒரு தேக்க நிலை நிலவுகிறது. தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் வேண்டும் என்றால்,பாமக ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இளைஞர்களால் மக்களுக்கு நல்லது நடக்கும், இனி நீங்கள் பார்க்க இருப்பது PMK 2.0" என பேசினார்

English summary
Anbumani Ramadoss said that the Pmk flag should fly in all the villages in a month and if there are new projects, the people want the Pmk to come to power and now what you have to see is Pmk 2.0.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X