Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நுங்கு" சீவுற மாதிரி.. கறிச்சோறு போட்டு கழுத்தை அறுத்த அப்பா.. ஊத்தங்கரை "மாமனார்" குறித்து மருமகள்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை ஆணவ கொலையின் அதிர்ச்சி இன்னமும் நீங்கவில்லை.. இதையடுத்து, தீவிர சிகிச்சையில் உள்ள இளம்பெண் அனுசுயாவிடம், மாஜிட்திரேட் வாக்குமூலம் பெற்றுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ளது அருணபதி.. இங்கு வசித்து வருபவர் தண்டபாணி.. மனைவி பெயர் சுந்தரி.. இவர்களுக்கு சுபாஷ் என்ற 25 வயது மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

Crime Krishnagiri honour murder and daughter in law confessed to the Magistrate

சுபாஷ் ஒரு எம்பிஏ பட்டதாரி ஆவார்.. இவர்கள் குடும்பத்துடன் திருப்பூரிலேயே தங்கி, பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர்.. தண்டபாணியின் மூத்த மகள் பவித்ரா, காதல் திருமணம் செய்து கொண்டார்...

சுபாஷ் கொலை: சுபாஷ் திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்... இதனால் அவர் திருப்பூரில் தங்கியிருந்து, வேலைக்கு செல்ல வேண்டி வந்தது.. அப்போது, 25 வயது அனுசுயா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.. இந்த பெண் துடியலூரை சேர்ந்தவர்.. இவரது தந்தை பெயர் சுவாமிநாதன்.. அனுசுயா எம்எஸ்சி பட்டதாரி ஆவார்.. பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் 27ம்தேதி திருமணம் செய்து கொண்டு, திருப்பத்தூரில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தனர்.

பட்டியலின பெண்ணை கல்யாணம் செய்ததால் தண்டபாணி ஆத்திரமடைந்தார்.. எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், தன்னுடைய தாய் கண்ணமாவிடம் போனில் பேசிய தண்டபாணி, "பையனுக்கு கறி சோறு ஆக்கிப்போடலாம், வீட்டுக்கு வரச்சொல்லு" என்று சொல்லி உள்ளார். அதைக் கண்ணம்மா தன்னுடைய பேரனிடம் சொல்லவும், அப்பா தன்னுடைய திருமணத்தை ஏற்றுக்கொண்டார் என்ற எண்ணத்தில், சுபாஷ், தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு, பாட்டி வீட்டுக்கு கடந்த 14-ம் தேதி வந்திருக்கிறார்.

Crime Krishnagiri honour murder and daughter in law confessed to the Magistrate

கறிவிருந்து: கறி விருந்து முடிந்து அன்றைய தினம் இரவு, மகன் சுபாஷ், மருமகள், தாய் கண்ணம்மா வீட்டுக்குள் உறங்க, தண்டபாணி அந்த வீட்டுக்கு வெளியில் படுத்திருந்தார். 15-ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு, பனை மரத்தில் நுங்கு சீவுவதற்காக பயன்படுத்தும் அரிவாளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த தண்டபாணி, முதலில் தூங்கிக்கொண்டிருந்த தனது மகனை, அரிவாளால் கழுத்தில் பலமாக 2 முறை வெட்டியிருக்கிறார். சத்தம் கேட்டு எழுந்த தன்னுடைய அம்மா, கண்ணம்மாவையும் கழுத்தில் சரமாரியாக வெட்டியிருக்கிறார். இதை கேட்டதும், தூக்கத்திலிருந்து எழுந்த அனுசுயா, அங்கிருந்த தப்ப முயன்று வீட்டைவிட்டு வெளியே ஓடியிருக்கிறார்.

ஆனாலும் மருமகள் அனுசியாவை துரத்திச் சென்று கழுத்து, முகம் கை என தண்டபாணி கண்மூடித்தனமாக வெட்டினார். உடல் முழுக்க ரத்த காயங்களுடன் வெளியே ஓடி வந்த அனுசியா வீட்டின் முன்பு மயங்கி விழுந்தார். மருமகளும் இறந்துவிட்டதாக நினைத்து, தண்டபாணி அங்கிருந்து தப்பினார்.. உயிருக்கு போராடிய மருமகள், தன்னுடைய கணவரின் சட்டையை எடுத்து, கழுத்தை சுற்றி கட்டிக்கொண்டு உதவி கேட்டு, அவர்களின் வீட்டுக்கு அருகில், 400 மீட்டர் தொலைவில் நடந்து சென்று, அங்கேயே மயங்கி விழுந்திருக்கிறார்...

அந்த வழியாக வந்தவர்கள், அவரை மீட்டு, போலீஸில் தகவல் தரவும், அவர்கள் வந்து, அனுசுயாவை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. இந்த சம்பவம் ஊத்தங்கரையை அலற வைத்தது.. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தண்டபாணியை கைது செய்தனர்... ஆனால், அவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.. எனினும் அவரை போலீசார் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கழுத்தில் படுகாயம், மூன்று விரல்கள் துண்டான நிலையில் அனுசுயா சிகிச்சை பெற்று வருகிறார்.. படுகாயங்களுடன் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் தண்டபாணியும் சிகிச்சை பெற்று வருகிறார்.. படுகொலை செய்யப்பட்ட அம்மா - மகன், இருவரின் சடலமும் போஸ்ட் மார்ட்டம் முடிந்து, அருணபதி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.. இந்நிலையில், படுகாயம் அடைந்த அனுசியாவிடம், சேலம் ஜே.எம்.3 கோர்ட் மாஜிஸ்திரேட் தங்ககார்த்திகா, 2 மணி நேரம் அதாவது காலை 9.45 மணி முதல் 11.45 மணி வரை வாக்குமூலம் பெற்றார்...

Crime Krishnagiri honour murder and daughter in law confessed to the Magistrate

தீவிர சிகிச்சை: பலத்த காயமடைந்துள்ள அனுசியாவுக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.. மேலும், அனுஷியாவிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதாம். இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு விசிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அனுசுயாவின் தம்பி இதுகுறித்து பேசும்போது, "அக்காவுக்கு தலை, கையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது... கையில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லி உள்ளனர்.. சீழ் பிடிக்காமல் இருக்க வேண்டும்.. அப்போது மறுபடியும் ஆபரேஷன் செய்தும் சரியாகவில்லையென்றால், கையை அகற்றும் நிலை ஏற்படலாம்.. அதனால், அரசு கவனம் செலுத்தி, சிறப்பு மருத்துவ குழுவை அமைத்து, உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும்... தண்டபாணிக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று நா தழுதழுக்க கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, அரிவாளுடன் சென்ற தந்தை, முதலில் தூங்கிக்கொண்டிருந்த தனது மகனை எழுப்பி, அதற்கு பிறகு அரிவாளால் வெட்டியிருக்கிறார்.. அந்த சத்தத்தை கேட்டு, எழுந்த தன்னுடைய தாய் கண்ணம்மாவையும் கழுத்தில் வெட்டியிருக்கிறார்... இந்த மரண ஓலத்தை கேட்டுதான், எழுந்த வந்த மருமகளையும் துரத்தி துரத்தி வெட்டியுள்ளார்.. 3 பேருமே இறந்துவிட்டதாக நினைத்துதான், அங்கிருந்து தப்பி, மெயின் ரோட்டுக்கு வந்திருக்கிறார் தண்டபாணி..

பிறகு, பஸ் பிடித்து, மக்கள் திதி கொடுக்கும் அனுமன் தீர்த்தம் கேயிலுக்கு சென்றுள்ளார்.. அங்கே தலைமுழுகிவிட்டு, மறுபடியும் அங்கிருந்து தீர்த்தமலை கோயிலுக்கு சென்றுள்ளார்.. மறுபடியும் அங்கும் தலைமுழுகியிருக்கிறார்.. அதற்கு பிறகுதான், அரிவாளால் தன்னுடைய கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் தண்டபாணி. இப்போது மருமகள், மாமனார் இருவருக்குமே சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.

முன்னதாக, அரிவாளுடன் சென்ற தந்தை, முதலில் தூங்கிக்கொண்டிருந்த தனது மகனை எழுப்பி, அதற்கு பிறகு அரிவாளால் வெட்டியிருக்கிறார்.. அந்த சத்தத்தை கேட்டு, எழுந்த தன்னுடைய தாய் கண்ணம்மாவையும் கழுத்தில் வெட்டியிருக்கிறார்... இந்த மரண ஓலத்தை கேட்டுதான், எழுந்த வந்த மருமகளையும் துரத்தி துரத்தி வெட்டியுள்ளார்.. 3 பேருமே இறந்துவிட்டதாக நினைத்துதான், அங்கிருந்து தப்பி, மெயின் ரோட்டுக்கு வந்திருக்கிறார் தண்டபாணி..

பிறகு, பஸ் பிடித்து, மக்கள் திதி கொடுக்கும் அனுமன் தீர்த்தம் கேயிலுக்கு சென்றுள்ளார்.. அங்கே தலைமுழுகிவிட்டு, மறுபடியும் அங்கிருந்து தீர்த்தமலை கோயிலுக்கு சென்றுள்ளார்.. மறுபடியும் அங்கும் தலைமுழுகியிருக்கிறார்.. அதற்கு பிறகுதான், அரிவாளால் தன்னுடைய கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் தண்டபாணி. இப்போது மருமகள், மாமனார் இருவருக்குமே சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+