தேமுதிகவுக்கு 20 சீட்டுகள்.. அதிமுக, திமுக இரண்டு பக்கமும் துண்டு.. பலே விஜய பிரபாகரன்
கிருஷ்ணகிரி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. ஒரு சில கட்சிகள் மட்டுமே தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளனர். அந்த வகையில் தேமுதிக நிலைப்பாடு குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் சம பலத்துடன் இருப்பதாக கூறியுள்ள தேமுதிக விஜய பிரபாகரன் தங்களுக்கு இத்தனை தொகுதிகள் வேண்டும் என்பது பற்றியும் வெளிப்படையாக பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களம் காண்பதால் 4 முனை போட்டி நிலவி வருகிறது. வழக்கம் போல நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டது.

தேமுதிக கூட்டணி
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ, மநீம உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. தவெக விஜய் கூட்டணி என்று அறிவித்தாலும் அவர்களுடன் எந்தக் கட்சியும் கூட்டணி சேரவில்லை.
தேமுதிக, ராமதாஸ் பாமக, முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், புதிய தமிழகம் கட்சி தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. தேமுதிக கட்சியின் மாநாடு கடந்த ஜனவரி 9 ஆம் தேதி நடைபெற்றது. அதில் அந்தக் கட்சி கூட்டணி பற்றி அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியாகவில்லை.
பிரேமலதா மறுப்பு
திமுகவை வீழ்த்த அதிமுக - பாஜக கூட்டணியில் பல்வேறு வியூகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா தமிழ்நாடு அரசியலை நேரடியாக கண்காணித்து வருகிறார். மத்திய அமைச்சரும், பாஜக தமிழ்நாடு பொறுப்பாளருமான பியூஷ் கோயல் பாஜக மதுராந்தகத்தில் கடந்த வாரம் தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநாடு நடைபெற்றது.
இதில் அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். தேமுதிகவும் அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையவுள்ளனர். மதுராந்தகம் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிரேதமலதாவிடம், பியூஷ் கோயல் தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்பட்டது. ஆனால் பிரேமலதா அந்த தகவலை மறுத்தார்.
மினிமம் 20 தொகுதிகள்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தங்களை யாரும் அணுகவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தேமுதிக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எந்தக் கூட்டணியில் இடம்பெறுவது என்பது பற்றி தேமுதிக ஆலோசனை நடத்தி வருகிறது. கிருஷ்ணகிரியில் தேமுதிக நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார்.
அப்போது அவர், "தமிழ்நாட்டில் தற்போது திமுக மற்றும் அதிமுக கூட்டணி சம பலத்துடன் இருக்கிறார்கள். இரண்டு கட்சிகளும் தலா 170 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளனர். தேமுதிக எந்தக் கூட்டணியில் இடம்பெறுகிறதோ அந்தக் கூட்டணி தான் வெற்றி பெறும். எல்லா கட்சிகளுக்கும் ஒரு கணக்கீடு இருக்கும். அப்படி எங்களுக்கும் கணக்கீடு உள்ளது. எங்கள் 20 முன்னாள் எம்எல்ஏக்கள் 20 பேருக்கு சீட் வழங்க வேண்டும்" என கூறியுள்ளார். முன்னாள் எம்எல்ஏக்களுடன் புது முகங்கள் மற்றும் சீனியர் நிர்வாகிகள் என மொத்தம் 25 - 30 சீட் கேட்க தேமுதிக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications