கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து! நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்!
கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி அரசு பேருந்தின் மீது கனரக லாரி மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்திலிருந்து தப்பிக்க அரசு பேருந்து சாலையோரமாக இருந்த பள்ளத்தில் புகுந்ததால், பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
பெங்களூரிலிருந்து 40 பயணிகளுடன் அரசு பேருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை பேரண்டப்பள்ளி என்னும் வனப்பகுதியில் பேருந்து சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த இரும்பு ஏற்றி வந்த கனரக லாரி, அரசு பேருந்தின் பக்கவாட்டில் உரசி மோதியது.

நிலைமையை புரிந்துக்கொண்ட அரசு பேருந்து ஓட்டுநர், சுதாரித்துக்கொண்டு சாலையோரமாக இருந்த பள்ளத்தில் பேருந்தை இறங்கியுள்ளார். இதனால் பேருந்து வனப்பகுதிக்குள்ளாக நுழைந்து லேசாக சாய்ந்தது. பேருந்து லைட்டாக அடி வாங்கினாலும், உள்ளே இருந்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அனைத்து பயணிகளும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications