சாந்தி தலையில் சுத்தியால் அடித்தும்.. கழுத்தை இறுக்கியும்.. தலைமறைவான கணவர்.. தூக்கி வந்த போலீஸ்
Recommended Video
கிருஷ்ணகிரி: சாந்தியை தலையில் சுத்தியால் அடித்தும், கயிற்றால் கழுத்தை இறுக்கியும் கொடூரமாக கொன்று தலைமறைவாக இருந்த கணவன் இளையராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
சூளகிரியில் வசித்து வந்தவர் சாந்தி. இவர் கணவர் இளையராஜா. துபாயில் வேலை பார்க்கிறார். சாந்தி, இங்கு ஒரு பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வந்தார்.
20 நாளைக்கு முன்னாடிதான் இளையராஜா துபாயில் இருந்து வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர், வீட்டின் உரிமையாளருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து பார்த்தனர்.

கொலை
அப்போது சாந்தி கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தார். தலையில் சுத்தியால் அடித்தும், அருகில் உள்ள ஜன்னல் கம்பியின் கயிற்றால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்தவாறு சடலமாகவும் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது இளையராஜா எஸ்கேப் ஆகியிருந்தார்.

விசாரணை
உடனடியாக இது குறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் சொல்லவும், விரைந்து வந்த அவர்கள் விசாரணையை ஆரம்பித்தனர். சாந்தி இறந்து 2 நாள் ஆகியும் எந்த க்ளூவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்த பகுதிக்கு சாந்தி இப்போதுதான் குடிவந்துள்ளதால், இவர்களை பற்றியும் யாருக்குமே சரியான விவரம் தெரியாததால், கொலையாளியை தேடி வந்தனர்.

இளையராஜா
இறுதியில் தலைமறைவான இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர் சொன்னதாவது: "எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை செய்து, அந்த பணத்தில் பொன்பரப்பியில் சாந்தி பெயரில் வீடு கட்டியுள்ளேன்.

சேட்டு
வேலை பார்த்த இடத்தில் சூளகிரியைச் சேர்ந்த சேட்டு என்பவர் எனக்கு பழக்கமானார். சாந்தி எனக்கு போன் செய்யும்போது சில சமயங்களில் அந்த போனை சேட்டு எடுத்து பேசுவது வழக்கம். அப்போதுதான் போனிலேயே இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில மாசத்துக்கு முன்பு சேட்டுவுடன் ஊருக்கு வந்தேன். நேரில் சாந்தியை அறிமுகம் செய்து வைத்தேன்.பிறகு நான் வெளிநாட்டுக்கு வந்துவிட்டேன்.

சாந்தி
ஆனால் சேட்டு ஊரிலேயே தங்கிவிட்டதால், சேட்டுவுக்கும் சாந்திக்கும் நெருக்கம் அதிகமாகிவிட்டது. அதனால் நான் கட்டி தந்த அந்த வீட்டை யாருக்கும் தெரியாமல் விற்றுவிட்டு, பிள்ளைகளையும் அவள் அம்மா வீட்டில் விட்டுவிட்டு, சேட்டுவுடன் சூளகிரிக்கே சென்றுவிட்டாள் சாந்தி. இந்த விஷயம் இப்போது நான் ஊர் திரும்பியபோதுதான் எனக்கு தெரிந்தது. 15 நாளாக தேடியும் சாந்தி கிடைக்கவில்லை. கடைசியில் சூளகிரியில் இருப்பதை கண்டுபிடித்து அந்த வீட்டுக்கு போனேன். சாந்தியுடன் இதை பற்றி கேட்டு சண்டை போட்டபோதுதான், ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டேன்" என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications