கள்ளக்காதல் மோகம்.. இரு பிள்ளைகளை தவிக்கவிட்டு தற்கொலைக்கு முயன்ற ஜோடி!
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றின் கரைப்பகுதியில் கள்ளக்காதலர்கள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
Recommended Video

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அடிபுதூர் அருகே உள்ள கொட்டாவூர் பகுதியை சேர்ந்த குள்ளம்மாள். அதே பகுதியைச் சேர்ந்தவர் பழனி. பழனிக்கு ஏற்கெனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் அவருக்கும் அங்கன்வாடி ஆசிரியையாக இருக்கும் குள்ளம்மாளுக்கு இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்தார்கள். இந்த நிலையில் நேற்று மாலை பழனி என்பவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி கிருஷ்ணாம்மா மற்றும் அவரது உறவினர்கள் காவல் துறையில் தகவல் அளித்ததனர்.
ஜிபிஎஸ் கருவி மூலம் காவல்துறையினர் அவர்கள் இருக்கும் இடத்தை தேடி வந்தனர். அவர் அனுமன் தீர்த்தம் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை பின் தொடர்ந்து அவரது உறவினர்கள் போய் பார்த்த போது கள்ளக்காதலர்கள் இருவரும் பூச்சிக்கொல்லி மருந்து அருந்திய நிலையில் இருந்தனர்.
இதையடுத்து இருவரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குள்ளம்மாளின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பழனியின் உடல்நிலையும் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.
இதையடுத்து பழனியும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். கள்ளக்காதல் மோகத்தால் இரு குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் பாராமல் தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications