கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவர்களுக்கு பாஜக துண்டு.. கல்வி அலுவலர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: எடப்பாடி பழனிசாமி பரப்புரையில், அவரை வரவேற்க பாஜக துண்டு போடப்பட்டு பள்ளி மாணவர்கள் சாலையில் நிற்க வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

பள்ளி மாணவர்களை அரசியல் பிரச்சாரங்களில் பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்திருக்கிறார்.

students BJP AIADMK

அரசியல் பிரசாரங்களில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என்பது குறித்து கல்வியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கல்வி நிலையங்களில் அரசியல் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கல்வியாளர்கள் கூறி வருகின்றனர். ஆம் மாணவர்களுக்கு அரசியல் கல்வி அவசியம். அரசியலற்ற மாணவர்கள் நோக்கமற்ற படை வீரர்கள் என்று சொல்லப்படுவதுண்டு.

எனவே மாணவர்களை அரசியல்மயப்படுத்தப்பட வேண்டும் என்று கூறும் கல்வியாளர்கள், எது சிறந்த அரசியல் என்பதை மாணவர்களே தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தகின்றனர். இதெல்லாம் செய்யாமல் வெறுமென பொம்பைகளை போல அரசியல் தலைவர்களின் கூட்டங்களுக்கு மணவர்களை திரட்டுவது என்பது தவறான முன்னுதாரனம் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். அந்த வகையில், தற்போது பள்ளி மாணவர்கள் அரசியல் பரப்புரைக்கு ஈடுபடுத்தப்பட்டிருப்பது குறித்து பலரும் கவலை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+