கிருஷ்ணகிரியில் ஏகப்பட்ட ஆபாச வீடியோக்கள்.. யாரந்த பெண்கள்? சுரேஷின் செல்போனை கண்டு ஆடிப்போன போலீஸ்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மலையில், பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனிடையே, கைதான சுரேஷின் செல்போனை போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள்.
கடந்த 19ம் தேதி, கிருஷ்ணகிரியில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.. திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டின் பின்புறம் உள்ள மலைக்கு சென்றிருக்கிறார்கள்..

அழுதுகொண்டே வந்த ஜோடி
அப்போது மலை உச்சியிலிருந்த 4 பேர் கொண்ட கும்பல், அந்த ஜோடியை மிரட்டி தங்க நகை, பணத்தை வழிப்பறி செய்துள்ளனர்.. அத்துடன், அவர்களில் 2 பேர் அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.. இந்த நிகழ்வுகளை தங்களின் செல்போனில் வீடியோவாகவும் அவர்கள் எடுத்துக் கொண்டனர். அந்த பெண்ணுடன் வந்தவரின் செல்போனை பறித்த கும்பல், அவரது ஜிபே செயலி மூலம் ரூ.7 ஆயிரத்தையும் பறித்துக் கொண்டு ஓடிவிட்டது.
மலையில் இருந்து கீழே இறங்கி வந்த ஆண் மற்றும் பெண் மிகவும் சோர்வாக அழுதபடி வந்ததை, கண்ட அங்கிருந்தவர்கள் விசாரித்துள்ளனர்.. மலையில் நடந்த சம்பவத்தை அழுதபடியே சொல்லிவிட்டு, போலீஸில் புகார் அளிக்காமல் சென்றுவிட்டார்கள்.
4 பேருமே அதிரடி கைது
அதற்கு பிறகு, இந்த சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார், அபிஷேக், கலையரசன் என்ற 2 பேரை கைது செய்தனர். அப்போது போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற சுரேஷ்(22) என்பவரை போலீசார் சுட்டு பிடித்தனர்.. அதேபோல, நாராயணன் என்பவர் போலீசிடம் இருந்து தப்ப முயன்றபோது தவறி விழுந்ததில் கால் முறிந்தது... இதையடுத்து, துப்பாக்கி குண்டடி பட்ட சுரேஷ், சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் உள்ளனர்.
இதனிடையே, சிகிச்சையில் உள்ள சுரேஷின் செல்போனை ஆய்வு செய்தார்கள்.. அதில், 10க்கும் மேற்பட்ட பெண்களின் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்தன.. அதில், மலை உச்சியில் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த வீடியோவும் இருந்திருக்கிறது.. சுரேஷால் ஏராளமான இளம்பெண்களும், கல்லூரி மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தனியாக வரும் காதலர்கள்
அதாவது, கிருஷ்ணகிரி மலை உச்சிக்கு தனியாக வரும் காதலர்களை குறி வைத்தே இந்த கும்பல் இயங்கி வந்துள்ளது.. தனியாக வரும் காதலர்களை மிரட்டி வழிப்பறி செய்து, அந்த இளம்பெண்களையும் பலாத்காரம் செய்வதையே இவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.. பாதிக்கப்பட்ட பெண்களும், இதை வெளியில் சொல்வதற்கு பயந்துவிடுவதால், இந்த கொள்ளை கும்பலுக்கு இதுவே தைரியத்தை தந்துவிட்டது.
எனவே, இந்த கொள்ளை கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார், எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. அதேபோல, சுரேஷின் செல்போனில் இருந்த வீடியோக்கள், எந்த தேதியில் எடுக்கப்பட்டவை என்ற விசாரணையும் துவங்கப்பட்டுள்ளது.
ஆபாச வீடியோ அனுப்பப்பட்டது யாருக்கு
இந்நிலையில், கைதான 4 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து, கிருஷ்ணகிரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.. காரணம், இந்த 4 பேர் மட்டுமல்லாமல், மேலும் சிலருக்கு இந்த கொள்ளை கும்பலுடன் தொடர்புகள் இருக்கிறதாம்.. அதுமட்டுமல்ல, செல்போனில் இருந்த இளம்பெண்களை பலாத்காரம் செய்த வீடியோக்களை, மேலும் சிலருக்கு சுரேஷ் அனுப்பி வைத்திருக்கிறாராம்.. அவர்கள் யார் என்று தெரியவில்லை.
அவர்களை பற்றி விசாரிக்கவும், கைதான 4 பேரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால், கைது நடவடிக்கை மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.. மொத்தத்தில் இந்த கிருஷ்ணகிரி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
வேலூர் தீர்த்தகிரி மலை
சில நாட்களுக்கு முன்பு, வேலூர் அடுத்துள்ள அலமேலுமங்காபுரம் தீர்த்தகிரி மலையிலும் இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்தது.. அங்கு காதல் ஜோடி ஒன்று தனிமையில் இருந்ததை பார்த்த அந்த ஒரு கும்பல், அவர்களை மிரட்டி நகை பறித்துள்ளது.. இந்த வழிப்பறி கும்பலை சேர்ந்த ரங்காபுரம் மூலக்கொல்லையை சேர்ந்த ஒருவர், தன்னுடைய நண்பனுக்கு இந்த விஷயத்தை செல்போனில் சொன்னது ஆடியோவாகவும் வெளிவந்தது.
இறுதியில், அய்யனார்(46), விநாயகம்(60) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இவர்களது வீடுகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.. அப்போதுதான், அய்யனார் வீட்டில் 50 டெட்டனேட்டர்கள், 100 ஜெலட்டின் குச்சிகள் பதுக்கி வைத்திருந்ததை பார்த்து போலீசார் அதிர்ந்தனர்.. இது தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மலை சம்பவமும் பேரதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications