கிருஷ்ணகிரி ஆணவ கொலை.. மகன் & பாட்டியை துடிக்க துடிக்க கொன்ற தந்தை கைது.. தற்கொலைக்கு முயன்றவர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பெற்ற மகனையே ஆணவக் கொலை செய்த தந்தையை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்துள்ள ஊத்தங்கரை அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். அவரது மகன் சுபாஷ் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த அனுஷா என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. தனது மகனின் காதல் குறித்து அறிந்த தண்டபாணி காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, காதலைக் கைவிடும்படி வலியுறுத்தியுள்ளார். இருப்பினும், சுபாஷ் காதலைக் கைவிடவில்லை.
இதற்கிடையே தந்தை எதிர்ப்பை சுபாஷ் சமீபத்தில் தான் அனுஷாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு சுபாஷ் தனது மனைவி அனுஷாவுடன் திருப்பூரில் வசித்து வந்துள்ளார்.

இதற்கிடையே நேற்றைய தினம் சுபாஷ் தனது மனைவியுடன் சொந்த ஊரான கிருஷ்ணகிரி அருணபதிக்கு டெந்றுள்ளார். சுபாஷின் பாட்டி கண்ணம்மா (தண்டபாணியின் தாய்) வீடும் அங்கே தான் இருந்த நிலையில், அங்கும் சென்றுள்ளார்.
அப்போது அதிகாலை நேரத்தில் அங்கே சென்ற தண்டபாணி அரிவாளை எடுத்து தனது சொந்த மகன் சுபாஷை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளார். மேலும், தடுக்க வந்த அவரது மனைவி அனுஷா மற்றும் தாய் கண்ணம்மா ஆகியோரையும் சரமாரியாக வெட்டினார். இதனால் மூன்று பேரும் அப்படியே அங்கு ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். தண்டபாணி அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அவர்கள் 3 பேரும் அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும், சுபாஷ் மற்றும் தண்டபாணியின் தாயார் இந்தச் சம்பவத்தில் பலியானார்கள். இந்தச் சம்பவம் மாநிலம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து இது குறித்து விசாரிக்க போலீசார் இரண்டு தனிப்படைகளை அமைத்து குற்றவாளி தண்டபானியை தேடி வந்தனர்.

இதனிடையே மகனை ஆணவக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். காதல் திருமணம் செய்த மகன் சுபாஷை ஆணவக் கொலை செய்த தண்டபாணியை போலீசார் கைது செய்தனர்.
தீர்த்தமலையில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற தண்டபாணி போலீசார் கைது செய்தனர். மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்ட போலீசார் ஊத்தங்கரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications