கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை-நாம் தமிழர் மாஜி நிர்வாகி சிவராமன் உட்பட 9 பேர் போக்சோவில் கைது!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 12 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் உள்ளிட்ட 9 பேர் அதிரடியாக போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன், பாலியல் வழக்கில் தேடப்பட்டதால் அக்கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.
கிருஷ்ணகிரி அருகே காவேரிப்பட்டிணத்தைச் சேர்ந்த சிவராமன், அப்பகுதியில் தனியார் பள்ளிகளில் தேசிய மாணவர் படை (என்சிசி) பயிற்றுநராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில்தான் 12 வயது பள்ளி மாணவியை சிவராமன் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக கந்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மாணவி, தம்மிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக சிவராமன் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து சிவராமன் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
தம் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டதால் சிவராமன் தப்பி ஓடி தலைமறைவானார். இதனால் சிவராமனைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிவராமன் தேடப்பட்டதால், நாம் தமிழர் கட்சியில் இருந்து அவர் நேற்று நீக்கப்பட்டார். இந்த நிலையில் தலைமறைவாக பதுங்கி இருந்த சிவராமனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் சிவராமனின் கூட்டாளிகள் 9 பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இவர்களில் கோமதி என்ற ஆசிரியையும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications