கிருஷ்ணகிரியில் ஓடிப்போனாரே ரூபா.. திரும்பி வந்து தேன்கனிக்கோட்டையில் செய்த "சம்பவம்".. இப்ப பாருங்க
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 25 வயது திருமணமான பெண் ரூபா, 20 வயது இளைஞருடன் வீட்டை விட்டே ஓடிவிட்டார்.. இதற்கு பிறகு குடும்பத்தினர் தேடி அலைந்து ரூபாவை கண்டுபிடித்து அழைத்து வந்தனர்.. ஆனாலும், தீபாவின் அட்டகாசம் அடங்கவில்லை.. இறுதியில் ஒரு உயிர் பறிபோய்விட்டது.. இளம் மனைவி செய்த காரியத்தை கண்டு, தேன்கனிக்கோட்டையே அன்று திகைத்தது. இன்று அது தொடர்பான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.
கடந்த 2021-ம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள உனிசெட்டியில் வசித்து வந்தவர் அய்யப்பன் 37 வயதான இவர், சரக்கு வாகன டிரைவர். அதாவது மினி சரக்கு வாகனத்தில் காய்கறிகளை ஏற்றி சென்று விற்பனை செய்து வந்தார்.மனைவி ரூபாவுக்கு 25 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

அய்யப்பனின் சொந்தக்காரர் தங்கமணி என்ற 20 வயது நபர், அய்யப்பனுக்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.. எனவே, வேலை விஷயமாக அடிக்கடி அய்யப்பன் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.. அப்போது ரூபாவுக்கும், தங்கமணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது..
கண்டித்தும் கேட்காத ஜோடி
இது அய்யப்பனுக்கு தெரிந்து இருவரையுமே கண்டித்திருக்கிறார். ஆனால், ஒருகட்டத்தில், தங்கமணியுடன், ரூபா ஓட்டம் பிடித்தார்.. ஆனாலும், உறவினர்கள் அவர்களை தேடி கண்டுபிடித்து, அழைத்து வந்துவிட்டனர்.
எனினும், மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றது, அய்யப்பனுக்கு தீராத வேதனையை தந்தது.. அதனால், மது பழக்கத்துக்கு அடிமையானார். இது தொடர்பாக ரூபாவிற்கும், அய்யப்பனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் (21.10.2021) இப்படித்தான் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.. அப்போதுதான், அய்யப்பனை கொன்றுவிடுவது என்று ரூபா முடிவு செய்திருக்கிறார். அதன்படியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்றுள்ளார். இதுதொடர்பாக ரூபாவை போலீசார் கைது செய்தனர்..
அதிர வைத்த ரூபாவின் வாக்குமூலம்
அப்போது போலீசில் ரூபா தந்திருந்த வாக்குமூலத்தில், எனக்கும், தங்கமணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். எங்களது கள்ளக்காதல் விவகாரம் எனது கணவருக்கு தெரியவந்தது. இதனால் நான் எனது கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் சென்றேன். பிறகு என்னை உறவினர்கள் மீண்டும் கணவருடன் சேர்த்து வைத்தனர்.
இதன் பிறகு கணவர் என்னிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்தார். இதனால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். இதுகுறித்து கள்ளக்காதலன் தங்கமணியிடம் சொன்னேன். என்னிடம் மது போதையில் கணவர் தகராறு செய்ததையும், 2 முறை அவர் தற்கொலைக்கு முயன்றதையும் கூறினேன்.
துப்பட்டாவில் கட்டினேன்
2 முறை அவர் தற்கொலைக்கு முயன்றதால், அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டால் அதை தற்கொலை என நம்ப வைத்து விடலாம் என நாங்கள் திட்டம் போட்டோம். அதன்படி இரவு மது போதையில் இருந்த கணவரின் கை, கால்களை துப்பட்டாவால் கட்டி விட்டு, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். பிறகு கத்தியை அவரது கையில் வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன்.
பிறகு அருகிலுள்ள என்னடைய மாமியார் வீட்டுக்கு சென்று, அய்யப்பன் என்னை அடித்து விரட்டி விட்டார் என கூறினேன். சிறிது நேரத்துக்கு பின்பு கணவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார் என கூறி அனைவரையும் நம்ப வைத்தேன்" என்றெல்லாம் கூறியிருந்தார். இதற்கு பிறகு, கள்ளஜோடி இருவரையும் போலீசார் சிறையிலடைத்தனர்..
அதிரடி தீர்ப்பு 2 பேருக்கும்
இதுகுறித்த வழக்கு விசாரணை, ஓசூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், ரூபா மற்றும் தங்கமணி ஆகிய இருவருக்கும், ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 1000 அபராதம் விதித்து நீதிபதி சந்தோஷ் தீர்ப்பளித்துள்ளார்.. 25 வயது பெண், துணிச்சலுடன் கொலை செய்ததும், அதற்கு தண்டனை கிடைத்துள்ளதும், மாவட்ட மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications