போலி NCC முகாம் நடந்த கிருஷ்ணகிரி பள்ளிக்கு சிறப்பு அதிகாரி.. சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்!

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: போலி என்சிசி முகாம் நடந்த விவகாரத்தில் கிருஷ்ணகிரி பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

போலி என்.சி.சி முகாம் நடத்திய கிருஷ்ணகிரி தனியார் பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அதிகாரி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

krishnagiri sivaraman high court

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த மாதம் என்.சி.சி பயிற்சி முகாம் நடந்தது. இதில் 13 வயது மாணவி, போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து அந்த போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன், உதவி பயிற்சியாளர்கள், பள்ளியின் முதல்வர், தாளாளர், ஆசிரியர்கள் என 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன், தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து சிவராமனின் தந்தையும் ஒரு விபத்தில் உயிரிழந்தார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, வழக்கறிஞர் சூரிய பிரகாசம் தாக்கல் செய்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, போலி என்.சி.சி முகாம் நடத்திய கிருஷ்ணகிரி தனியார் பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அதிகாரி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டதால் சிறப்பு அதிகாரியை நியமிக்க தனியார் பள்ளி கல்வி இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட பன்னோக்கு சிறப்புக்குழுவின் அறிக்கையும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் சிறப்பு குழுவானது சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கியதாகவும், பாதிப்பிலிருந்து விரைந்து மீட்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி என்.சி.சி முகாம் நடத்தப்பட்டதாக கூறப்படும் மற்ற பள்ளிகளுக்கும் சென்று அங்கும் பல்வேறு உளவியல் ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போக்சோ புகார்களை எப்படி வழங்குவது ஆசிரியர்கள் அதை எப்படி கையாள்வது உள்ளிட்ட ஆலோசனையும் வழங்கியுள்ளதாகவும், பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு மன அழுத்தம் உள்ளதா என கண்டறியப்பட்டுள்ளதாகவும், மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எதிர்கால பாதுகாப்பு குறித்தும் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்களை தடுக்கும் வகையில் நடைமுறையில் உருவாக்க சிறப்பு குழு அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நிர்வகிக்க தனியார் பள்ளி கல்வி இயக்குனருக்கு தற்போது பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பரிந்துரை தீவிர பரிசீலனையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, போலி என்.சி.சி முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+