எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பாலியல் பலாத்கார குற்றவாளி சிவராமன்! மருத்துவமனையில் அனுமதி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்படுவதற்கு முன்பே எலி பேஸ்ட் சாப்பிட்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்த நிலையில், அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில் கடந்த 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8 ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை போலி என்.சி.சி பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளனர். இதுதொடர்பாக சிவராமன் உட்பட 11 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிவராமன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததும் அவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்பேரில் இன்று சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையை தொடங்கியது.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. சிவராமன், தான் கைது செய்யப்படப்போவதை அறிந்து கடந்த 16 மற்றும் 18 ஆம் தேதி ஆகிய 2 நாட்களில் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கைது நடவடிக்கைக்கு முன்பாக தான் எலி பேஸ்ட் சாப்பிட்டதாக சிவராமன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று சிறப்பு விசாரணைக்குழுவினர் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ஐ.ஜி.பவானீஸ்வரியிடம், சிவராமன் ஏன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த பவானீஸ்வரி, "கைது செய்யப்படுவதற்கு முன்பாக சிவராமன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications