ராணுவ வீரர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு.. திமுக கவுன்சிலர் உள்பட 9 பேர் அதிரடியாக கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ராணுவ வீரர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் திமுக கவுன்சிலர் சின்னசாமி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ராணுவ வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக கவுன்சிலர் சின்னசாமி உள்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராணுவ வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, வேலம்பட்டி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் பிரபு வயது 28. இவர் ராணுவ வீரர் ஆவார். இவரது அண்ணன் பிரபாகரன் வயது 33 இவரும் ராணுவ வீரராக உள்ளார்.
கடந்த பிப்ரவரி 8ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டியில் உள்ள குடிநீர் தொட்டி அருகே பிரபாகரன் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற நாஹோகனஹள்ளி பேரூராட்சியில் ஒன்னாவது வார்டு திமுக கவுன்சிலர் சின்னச்சாமி, குடிநீர் கிடைக்கும் இடத்தில் இப்படி துணி துவைப்பது சரியா? என்று வாக்குவாதம் செய்திருக்கிறார்.

வாக்குவாதம்
இந்நிலையில் கவுன்சிலர் சின்னசாமி சத்தம் போட்டதை பார்த்து பிரபாகரனும் பேசியிருக்கிறார். அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் கோபத்தில் அங்கிருந்து சென்ற திமுக கவுன்சிலர் சின்னசாமி, அன்று மாலை 10க்கும் மேற்பட்டோருடன் சென்று ராணுவ வீரர்கள் பிரபாகரன், பிரபு ஆகியோருடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டராம். அப்போது வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறி உள்ளதாம்.

படுகாயம்
இந்நிலையில் கவுன்சிலர் சின்னசாமி அன்று மாலையே 10 பேருடன் வந்து, ராணுவ வீரர் பிரபாகரன் மற்றும் அவரது தம்பி பிரபு ஆகியோரை தாக்கியிருக்கிறாராம். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில மோசமாக படுகாயம் அடைந்த ராணுவ வீரர் பிரபு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

போலீசில் புகார்
ஓசூர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்த ராணுவ வீரர் பிரபு, செவ்வாய்கிழமை மாலை இறந்தார். இதையடுத்து நாகரசம்பட்டி போலீசார், கொலை வழக்காக பதிவு செய்த நிலையில் இந்த வழக்கில் திமுக கவுன்சிலர் சின்னசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக பிரபுவின் மனைவி பிரியா நாகரசம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

திமுக கவுன்சிலர்
இந்த புகாரை அடுத்து, கவுன்சிலர் சின்னசாமி (வயது 50 ) மகன்களான ராஜபாண்டி(30), சென்னையில் போலீசாக பணிபுரியும் குருசூரியமூர்த்தி, (27), குணநிதி (19), புலிப்பாண்டி(22), கவுன்சிலர்களின் உறவினர்களான மணிகண்டன் (60) , வேடியப்பன் (54), சின்னசாமி (60), காளியப்பன் (50) ஆகிய 9 பேரை கைது செய்தனர். முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராணுவ வீரர் கொல்லப்பட்டதற்கு கடும்கண்டனம் தெரிவித்தார். பாஜக சார்பில் முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்துவார்கள் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications