அசிங்கமா இருக்கேனு திட்டுனாரு.. மஞ்சுளா கூட கனெக்சன்! அதான் எரிச்சுட்டேன்.. கிறுகிறுக்க வைத்த கவிதா
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கணவரை எரித்துக் கொலை செய்து விட்டு திருப்பதியில் பதுங்கியிருந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். தனது கணவர் மஞ்சுளா என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்ததோடு தன்னை அசிங்கமாக இருப்பதாக அடிக்கடி திட்டியதால் அவரை எரித்து கொலை செய்ததாக அதிரவைக்கும் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி சேர்ந்த 47 வயதான ரங்கசாமி என்ற கூலித் தொழிலாளி கடந்த ஒன்பதாம் தேதி வீட்டின் மாடியில் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அவரது மனைவி கவிதா தலைமறைவாகி இருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் ரங்கசாமியை கவிதாவே பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது தெரிய வந்தது.
தீவிர சிகிச்சையில் இருந்த ரங்கசாமி கடந்த 11ஆம் தேதி மரணம் அடைந்தார். இதை அடுத்து கொலை வழக்காக மாற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து கவிதாவை தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை செய்து விட்டு தலைமறைவான கவிதா திருப்பதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

கிருஷ்ணகிரி
இதை அடுத்து கவிதாவை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சி தரத்தக்க வகையில் இருந்தது. கவிதாவுக்கும் ரங்கசாமிக்கும் 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இரு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார்கள். மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் இரண்டாவது மகள் படித்து வருகிறார்கள். சொத்து, நகை, பணம் என மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ரங்கசாமி வேலைக்கு சென்று இருக்கிறார்.
கள்ளக்காதல்
அங்கு காரிமங்கலத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. இதனை அறிந்த கவிதா ரங்கசாமியை கண்டித்துள்ளார். ஆனாலும் மஞ்சுளாவுடன் பழகுவதை நிறுத்தாத ரங்கசாமி வீட்டிலிருந்த 80 சவரன் தங்க நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சுளாவுக்கு எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் நிலம், வீடு என அனைத்தையும் விற்று மஞ்சுளாவுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
தாக்குதல்
இதை அடுத்து வாடகை வீட்டுக்கு சென்ற கவிதா குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார். நாட்கள் செல்ல செல்ல மஞ்சுளா வீட்டிலேயே தங்கிய ரங்கசாமி கவிதாவின் வீட்டுக்கு வரவில்லை. மேலும் வருடத்திற்கு நான்கு, ஐந்து முறை வந்தாலும் மது குடித்துவிட்டு கவிதாவை ஆபாசமாக திட்டியதோடு நீ அழகாக இல்லை.. அசிங்கமாக இருக்கிறாய் என கூறி தாக்குவாராம்..
போலீஸ் விசாரணை
இந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி இரவு வீட்டுக்கு வந்த ரங்கசாமி நீ அசிங்கமாக இருக்கிறாய் எனக் கூறி கவிதாவை தாக்கி இருக்கிறார். குழந்தைகளுக்காக இத்தனை நாள் பொறுத்துக் கொண்ட கவிதா அன்று ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றிருக்கிறார். மது போதையில் தூங்கிக் கொண்டிருந்த ரகசாமியின் மீது போர்வையை போர்த்தி அதில் பெட்ரோலை ஊற்றி இருக்கிறார் மீண்டும் கட்டையில் ஒரு துணியை சுற்றி பந்தம் போல தயார் செய்து அதன் மூலம் பெட்ஷீட்டில் தீ வைத்துள்ளார் தீப்பற்றி ரங்கசாமி அலறிய நிலையில் தான் தப்பி வந்து விட்டதாகவும் மருத்துவமனையில் இறந்தது போலீசார் கைது செய்ததற்கு பிறகுதான் தனக்கு தெரியும் எனக்கூறி அதிர வைத்திருக்கிறார். இதை அடுத்து கவிதாவை சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.
-
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
கும்மிடிப்பூண்டி சிறுமி உடலில் அதிக ரத்தப்போக்கு! மூச்சு பேச்சு இல்லை! ஸ்டான்லி மருத்துவர் விளக்கம் -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
ராசிபுரம் அருகே துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.. நகைகளுடன் 2 பேர் கைது! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே












Click it and Unblock the Notifications