சினிமாவே தோத்துடும்.. எஸ்.ஐ தேர்வில் நூதன முறையில் "காப்பி" அடித்த இளைஞர்.. தட்டி தூக்கிய போலீஸ்
கிருஷ்ணகிரி: தமிழகம் முழுவதும் நேற்று நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில், முக கவசத்தோடு சேர்த்து ஹெட் செட் பயன்படுத்தி தேர்வு எழுதிய கிருஷ்ணகிரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு ஹெட்போன் மூலம் சொல்லிக்கொடுத்த உறவினரும் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் போலீஸ் துறையில் காலியாக உள்ள 621 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதற்கு 1 லட்சத்து 45 ஆயிரத்தும் மேலானோர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று சப் இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நடந்தது. தேர்வர்களுக்கு பலத்த சோதனை நடத்தப்பட்டது.

செல்போன் மற்றும் மின் சாதன பொருட்களை தேர்வர்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதேபோல் பெண் தேர்வர்களுக்கு பூ அணிந்து வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இப்படி பல்வேறு சோதனைகளுக்கு பிறகே தேர்வர்கள் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அறையிலும் போலீஸ் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இப்படி பல்வேறு சோதனைகளுக்கு பின்னரும் ஒருவர் முக கவசத்தோடு ப்ளூ டூத் ஹெட்போனை பயன்படுத்தி தேர்வு எழுதிய சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது. அதாவது வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடிகர் கமல்ஹாசன் தேர்வு எழுதும் போது ஹெட்போனை பயன்படுத்தி வெளியில் இருந்து ஒருவரிடம் பதிலை கேட்டு கேட்டு எழுதுவார். அதே பானியில தான் கிருஷ்ணகிரியில் வாலிபர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு மாட்டிகொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அதியமான என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியிலும் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 3 ஆயிரத்து 559 தேர்வர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். இதில், காலையில் நடந்த, பொது அறிவு தாள் தேர்வினை தேர்வர்கள் மும்முரமாக எழுதிக்கொண்டிருந்தனர். அப்போது அறையில் இருந்து திடீரென ஒரு சத்தம் கேட்டது.
இதனால் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிந்த போலீசார் தேர்வர்கள் அனைவரையும் சோதனை செய்தனர். அப்போது, வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஹெட்போனை பயன்படுத்தி பேராசிரியர் ஒருவரிடம் கேள்விகளுக்கான பதிலை கேட்டு எழுதுவது போல் ஒரு வாலிபர் முக கவசத்தோடு இணைக்கப்பட்டிருந்த ஹெட்போன் மூலம் உறவினர் ஒருவரிடம் இருந்து பதிலை கேட்டு எழுதி வந்துள்ளார்.
இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். இதில், அந்த வாலிபர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நவீன் என்பது தெரியவந்தது. மேலும் அவருக்குஅவரது உறவினர் ராஜவேல் என்பவர் தான் வெளியில் இருந்து செல்போன் மூலம் தேர்வு எழுத உதவியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராஜவேலும் கைது செய்யப்பட்டார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications