தமிழ்நாட்டில் வாரிசு அரசியல்.. மகன் உதயநிதியை அமைச்சராக்கியுள்ளார் மு.க.ஸ்டாலின்.. ஜேபி நட்டா பேச்சு
தமிழ்நாட்டில் திமுக குடும்ப அரசியல் செய்து வருவதாக ஜேபி நட்டா விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரி: வரும் காலத்தில் பாஜக தொண்டர்களின் கடின உழைப்பால் தமிழ்நாட்டில் தாமரை மலரப் போகிறது என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். பிரித்தாளும் அரசியல், வாரிசு அரசியலில் பிரதமர் மோடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மகனை அமைச்சராக்கி உள்ளதாக விமர்சித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழ்நாடு வந்துள்ளார். பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வந்த ஜேபி நட்டாவுக்கு தமிழ்நாடு பாஜக சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி கூட்டுரோட்டில் கட்டப்பட்டுள்ள பாஜக தலைமை அலுவலகத்தை ஜேபி நட்டா திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் ஜே.பி.நட்டா
அதனைத் தொடர்ந்து, அதனை தொடர்ந்து, பாஜக கொடியை ஏற்றி வைத்த ஜேபி நட்டா, பின்னர் தர்மபுரி, நாமக்கல், திருச்சி, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்ட பாஜக அலுவலகங்களை காணொளி மூலமாக திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் தாமரை மலரும்
இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசுகையில், தமிழ்நாட்டில் ஒரே நாளில் 10 பாஜக அலுவலகங்கள் திறக்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும். அனைத்து மாவட்ட தலைமையகத்தில், நவீன முறையில் பாஜக அலுவலகம் திறக்க அமித்ஷா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் திறக்கப்பட்டுள்ள கட்சி அலுவலகம் அனைத்தும், 24 மணி நேரமும் திறந்தே இருக்கும். தமிழ்நாடு பாஜகவினர் சோதனை காலக் கட்டத்திலும் அர்ப்புணப்புடன் பணியாற்றி வருகிறார்கள். வரும் காலத்தில் பாஜக தொண்டர்களின் கடின உழைப்பால் தமிழ்நாட்டில் தாமரை மலரப் போகிறது.

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி
பாஜக மட்டுமே கொள்கை சார்ந்து இயங்கும் ஒரே கட்சி. மற்ற மாநிலங்களில் சிறந்த ஆட்சியை பாஜக வழங்கி வருகிறது. அதன் காரணமாக தான் பல மாநிலங்களில் இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்துள்ளோம். அதுபோல் தமிழ்நாட்டிலும் சிறப்பாக பணியாற்றினால் நிச்சயம் ஆட்சியை பிடிக்கலாம். இந்தியாவில் 18 கோடி தொண்டர்களுக்கும் அதிகமான உள்ள கட்சி தான் பாஜக. அதுமட்டுமல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.

இந்தியா வளர்ச்சி
பிரித்தாளும் அரசியல், வாரிசு அரசியலில் இருந்து பிரதமர் மோடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார். நேர்மையாக அரசியல் மூலம் பாஜக வளர்ச்சியை கொடுத்து வருகிறது. 10வது இடத்தில் இருந்த இந்தியாவின் பொருளாதாரத்தில் 5வது இடத்திற்கு முன்னேற்றி உள்ளோம். அதுமட்டுமல்லாமல் ஏர் இந்தியா தற்போது 470 விமானங்களை வாங்க உள்ளது. அதற்கான கையெழுத்து போட்ட போது, பிரான்ஸ் அதிபர் பிரதமர் மோடிக்கு நன்றி கூறியுள்ளார்.

குடும்ப அரசியல்
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன், இந்தியா செல்போனை இறக்குமதி செய்து வந்தது. ஆனால் இப்போது உலக நாடுகளுக்கு இந்தியா செல்போன் ஏற்றுமதி செய்கிறது. 9 ரயில்வே திட்டங்களை பாஜக தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ளது. தமிழ் மீதும், தமிழ் கலாச்சாரம் மீது பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். காசி சங்கமம் நிகழ்ச்சி பெரியளவில் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநிலக் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின், வளர்ச்சி குறைந்துள்ளது. குடும்பத்திற்காகவும், வாரிசுகளுக்கான கட்சியாகவும் மாறியுள்ளது.

வாரிசு அரசியல்
தமிழ்நாட்டில் சிறந்த ஆட்சியை பாஜகவால் மட்டுமே கொடுக்க முடியும். மாநிலக் கட்சிகள் எப்படி குடும்பக் கட்சியாக மாறியுள்ளது என்பதை பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மகனை அமைச்சராக ஆக்கியுள்ளார். திமுக குடும்ப ஆட்சி செய்கிறது. மு.க.ஸ்டாலின் தனது மகனை அமைச்சராக்கியதன் மூலம் வாரிசு அரசியலை செய்கிறார். ஆனால் பாஜக அப்படியல்ல என்று தெரிவித்தார்.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு












Click it and Unblock the Notifications