கிருஷ்ணகிரி சுவர்ணா .. முட்டை மசாலா கேட்ட கணவன்.. போலீசுக்கு ஓடிய போன மனைவி.. பரிதாப மகன்.. அடகடவுளே
கிருஷ்ணகிரி: மனித உயிர்களின் மதிப்பு தெரியாமல், கொலை, தாக்குதல் போன்ற வன்முறை சம்பவங்கள் பெருகி கொண்டே வருகிறது.. மது போதை கண்ணை மறைக்கும்போது, எந்த உறவுகளும், போதைப்பேர்வழிகளுக்கு தெரிவதுமில்லை.. என்ன நடந்தது கிருஷ்ணகிரியில்?
சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானாவில் ஒரு கொடுமை நடந்தது.. நலகொண்டா மாவட்டம், ஷெர்லா கௌராம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் 28 வயது நவீன்.. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.

சமையல்: சம்பவத்தன்று மூக்கு முட்ட குடித்துவிட்டு, மட்டன் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு போயிருக்கிறார்.. மட்டனை மனைவியிடம் கொடுத்து சமைத்து தரும்படியும் நவீன் கேட்டிருக்கிறார். ஆனால் கணவன் ஓவராக குடித்துவிட்டு வந்ததால், அதிருப்தியடைந்த மனைவி மட்டனை சமைக்க முடியாது என்று சொல்லிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த நவீன், மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
போதையில் வீட்டுக்கு வந்தால் சமைத்து தர முடியாது என்று மனைவி தகராறு மறுத்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த நவீன், உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் 100 நம்பருக்கு போன் செய்து, "ஹலோ போலீஸ்கார்.. என் மனைவி மட்டன் சமைக்க மாட்டேங்கறார்.. உடனே மட்டன் சமைக்க சொல்லுங்கள்" என்று புகார் தந்தார். ஆனால், போலீஸார் யாரோ தெரியாமல் இப்படி போன் செய்கிறார்கள் என்று நினைத்து இணைப்பை துண்டித்துவிட்டனர்.
6 முறை போன்: ஆனால், மறுபடியும் மறுபடியும் அதே நம்பருக்கு நவீன் விடாமல் போன் செய்து, மனைவியை மட்டன் சமைக்க சொல்லுங்கள்" என்று புகார் சொல்லிக்கொண்டே இருந்தார்.. இப்படியே 6 முறை போன் செய்திருக்கிறார்.
இதனால் டென்ஷனான போலீஸார், நவீனை கைது செய்ய வீட்டுக்கு போனார்கள். ஆனால், குடிபோதையில் அவர் இருந்த நிலைமையை பார்த்துவிட்டு, கைது செய்யாமல் வந்துவிட்டனர். ஆனால், மறுநாள் காலையில் போதை தெளிந்ததுமே கைது செய்துவிட்டனர். போலீஸாரின் நேரத்தை வீணாக்கியதாக அவர்மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
சமையல் விஷயத்தில் குடிபோதையில் இப்படி எத்தனையோ சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நம்முடைய கிருஷ்ணகிரியில் ஒரு கொலையே நடந்துவிட்டது. அதுவும் முட்டை மசாலாவுக்காக...!!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கிலிகானப்பள்ளியை சேர்ந்தவர் ரஜினி.. இவர் ஒரு கூலித்தொழிலாளி.. இவருடைய மனைவி பெயர் சுவர்ணா... கடந்த 16-ந் தேதி மதியம், தன்னடைய வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த ரஜினி, மனைவியிடம் முட்டை மசாலா கேட்டார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறும் ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் கோபமடைந்த ரஜினி, சுவர்ணாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் இவர்களது மகன் சூர்யா குறுக்கிட்டு, சண்டையை நிறுத்துமாறு சொல்லியிருக்கிறார். இதனால் சூர்யா மீதும் ரஜினிக்கு கோபம் அதிகரித்து, சூர்யாவையும் தாக்கி, அவரது கழுத்தையும் பிடித்து நெரித்துள்ளார்.. இதில் சூர்யா தொண்டையில் காயம் ஏற்பட்டு மூச்சு திணறி மயங்கி விழுந்துவிட்டார்..
சூர்யா: இந்த தகராறு கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, சூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அங்கு சூர்யாவுக்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.
இதனிடையே, தன்னுடைய கணவர் மீது சுவர்ணா போலீசில் புகார் தந்தார்.. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரஜினியை கைது செய்துள்ளனர்.. முட்டை மசாலா செய்து தராததால்தான் தனக்கு கோபம் அதிகமாகிவிட்டதாக போலீசாரிடம் கூறியிருக்கிறார் கோபக்கார கணவர்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..!












Click it and Unblock the Notifications