ஷாக்.. எக்ஸாமில் சினிமா பாட்டு எழுதிய மாணவன்.. ராத்திரியோடு ராத்திரியாக சுடுகாட்டில் நடந்த பகீர்!
கிருஷ்ணகிரியில் பிளஸ் 2 மாணவன் தற்கொலை
கிருஷ்ணகிரி: விடைத்தாளில் சினிமா பாட்டை எழுதி வைத்த மாணவன், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அந்த மாணவனின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டில் கொண்டு போய் பெற்றோர் எரித்த சம்பவம் அதைவிட அதிர்ச்சியை தந்து வருகிறது.
Recommended Video

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ளது ஒட்டத்தெரு கிராமம்.. இந்த கிராமத்தை சேர்ந்தவர்தான் கார்த்திக்.. போச்சம்பள்ளி அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சனிக்கிழமை ஸ்கூலில் தாவரவியல் தேர்வு நடந்துள்ளது... சரியாகவும் படிக்கவில்லை.. அதனால், அந்த தேர்வில் பல கேள்விகளுக்கு கார்த்திக்குக்கு பதில் தெரியவில்லை.. அதனால், விடை தெரியாத கேள்விகளுக்கு கார்த்தி சினிமா பாட்டுகளை எழுதிவைத்துவிட்டார்.

விடைத்தாள்கள்
இதையடுத்து, அந்த விடைத்தாள்களை தாவரவியல் ஆசிரியர் சகாதேவன் திருத்தினார்.. அப்போதுதான் கார்த்திக்கின் பேப்பரை பார்த்து அதிர்ந்து போய்விட்டார்.. பிறகு கார்த்திக்கை நேரடியாக வரவழைத்தார்.. அதன்படியே கார்த்திக் சென்றதும், கடுமையாக திட்டி உள்ளார்.. அப்போதும் அந்த ஆசிரியருக்கு டென்ஷன் அடங்கவில்லை.

கிளாஸ்
அதனால், கார்த்திக்கின் விடைத்தாளை கிளாஸில் மற்ற மாணவர்களுக்கு முன்பு படிக்க வைத்ததாக தெரிகிறது.. அன்றைய நாள் முழுவதும் கார்த்திக் எழுதிய சினிமா பாட்டு குறித்து மற்ற டீச்சர்களிடமும் சகாதேவன் தெரிவித்துள்ளார்.. மேலும் திங்கட்கிழமை ஸ்கூலுக்கு வரும்போது, வீட்டில் இருந்து பெற்றோரை அழைத்துவரும்படியும் சொல்லி உள்ளனர்.

ஆசிரியர்கள்
இதனால் உச்சக்கட்ட அவமானம் அடைந்த கார்த்திக், வீட்டுக்கு சென்றதில் இருந்து அழுது கொண்டே இருந்திருக்கிறார்.. மற்ற மாணவர்கள் முன்பு கேலி செய்ததும், மற்ற ஆசிரியர்கள் திட்டியதும் நினைத்து மனம் உடைந்து போய் விட்டனர்.. மகன் கதறி கதறி அழுதை பார்த்த, கார்த்திக்கின் அம்மா, நடந்தது குறித்து கேட்டுள்ளார்.. அப்பா வரட்டும் பேசலாம் என்றும் சமாதானம் சொல்லி உள்ளார்.

சடலம்
அழுதுகொண்டே இருந்த கார்த்திக், வீட்டில் எல்லாரும் தூங்கி கொண்டிருந்த நேரத்தில், நடுராத்திரி 1 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்... சற்று நேரத்தில் கார்த்திக்கின் தங்கை கண்விழித்து பார்த்தபோதுதான், தூக்கில் சடலமாக தொங்கிக்கொண்டிருந்த கார்த்திக்கை கண்டு அலறினார்.. மகனின் சடலத்தை பார்த்து பெற்றோர் துடிதுடித்து அழுதனர்..

விசாரணை
ஆனால், போலீசில் இதை பற்றி தகவல் சொல்லவே இல்லை.. காலை 5 மணியளவில் கார்த்திக்கின் சடலத்தை அவரது பெற்றோர் சுடுகாட்டில் வைத்து எரித்துவிட்டனர்.. இதற்கு பிறகுதான் விஷயம் போலீசுக்கே தெரியவந்தது.. நடந்தது குறித்து புகார் எதையும் கார்த்திக்கின் பெற்றோர் கொடுக்காததால், நடவடிக்கை எடுக்கப்படுமா? என தெரியவில்லை. ஆனால், சினிமா பாட்டை எழுதி வைத்ததால், நடந்த விபரீதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications