ரூ 3 கோடி சொத்தை பறித்து தாய்- தந்தையை விரட்டிய மகன்.. சொத்தை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த அதிகாரி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ரூ 3 கோடி சொத்தை பறித்த மகன்.. தாய்- தந்தையை மனைவியுடன் சேர்ந்து விரட்டிய கொடூரம்

    கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தாய், தந்தையிடமிருந்து சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பெற்றுக் கொண்டு, பெற்றோர்களை வீட்டை விட்டு விரட்டிய மகனிடமிருந்து சொத்தை மீண்டும் வாங்கி, பெற்றோரிடம் வருவாய் கோட்டாட்சியர் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் அருண்குமார். தனது கிட்னி செயல் இழந்த நிலையில் உயிருக்கு போராடிய அருண்குமாருக்கு, தாய் தனது கிட்னியை தானமாக வழங்கி காப்பாற்றி உள்ளார்.

    Revenue Divisional Officer retrieves Rs 3 crore worth assets and give it back to elderly couple

    பின்னர் திருமணம் செய்து கொண்ட அருண்குமாருக்கு, பெற்றோர்கள் கிருஷ்ணகிரியில் உள்ள 10 கடை உள்ளிட்ட சுமார் 3 கோடி மதிப்பிலான நிலங்களையும் தானமாக எழுதிக் கொடுத்துள்ளனர்.

    பின்னர் காலப்போக்கில் அருண்குமார் தனது மனைவியுடன் சேர்ந்து, பெற்றோர்களை வீட்டை விட்டு விரட்டி கொடுமைப்படுத்தி உள்ளதாக தெரிகிறது.

    பெற்ற ஒரே மகனால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளான பெற்றோர்கள், முதியோர் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்து இருந்தனர். பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு, அருண்குமாருக்கு தானமாக பெற்றோர்கள் எழுதிக் கொடுத்த கடைகள் மற்றும் ரூபாய் மூன்றுக் கோடி மதிப்பிலான சொத்துக்களை, அருண்குமாரிடம் இருந்து திரும்ப பெற்ற கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாச்சியர் தெய்வநாயகி பெற்றோர்களிடம் ஒப்படைத்தார்.

    பின்னர், இனிமேல் அருண்குமார் எக்காரணத்தைக் கொண்டும் தாய், தந்தையர்களிடம் இருந்து சொத்தை அபகரிக்கக் கூடாது. இதையும் மீறி சொத்தை அபகரித்தால், அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+