பசுபதி பாண்டியன் கொலை உட்பட பல வழக்கு.. ‛கோழி’ அருள் துப்பாக்கி முனையில் கைது..ஓசூரில் பரபர சம்பவம்
கிருஷ்ணகிரி: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கோழி அருளை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பங்களா சுரண்டையை சேர்ந்தவர் கோழி அருள். இவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார்.
இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்பட 20க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி மாவட்ட போலீஸ் நிலையங்களில் அதிக வழக்குகள் பதிவாகி உள்ளன.
சாதி ரீதியிலான கொலை, தாக்குதல் உள்ளிட்டவற்றில் இவர் ஈடுபட்டதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதோடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பசுபதி பாண்டியன் கொலை வழக்கிலும் இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அதோடு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் கராத்தே செல்வின் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக சென்னையில் வைத்து கட்டதுரையை கொலை செய்த வழக்கு கோழி அருள், ராக்கெட் ராஜா போன்றோர் மீது உண்டு. கோழி அருள் குடும்பம் 1990களில் கோழி கடை வைத்திருந்த காரணத்தால் அவருக்கு இந்த பெயர் வந்ததாக கூறுவார்கள். ராக்கெட் போல வேகமாக தாக்குதல் நடத்தக்கூடியவர் என்று ராக்கெட் ராஜாவிற்கு அந்த அடைமொழி வந்ததை போல கோழி அருளுக்கு இந்த பெயர் ஒட்டிக்கொண்டது.
இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அடிக்கடி போலீசாரால் கைது செய்யப்படும் கோழிஅருள் அதன்பிறகு ஜாமீனில் வெளியே வருகிறார். இந்நிலையில் தான் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் போலீசார் பதிந்த வழக்கில் அவர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து அவரை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து கோழி அருளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தனிப்படை போலீசார் கோழி அருள் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் ஓசூர் பகுதிக்கு சென்றனர்.

கோழி அருள் பதுங்கி இருந்த இடத்தை நேற்று நள்ளிரவில் போலீசார் சுற்றி வளைத்தனர். அதன்பிறகு அவரை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கோழி அருளை ஓசூரில் இருந்து அம்பாசமுத்திரத்துக்கு போலீசார் வாகனத்தில் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications