தமிழக வாக்காள பெருமக்களே, இறுதி வாய்ப்பு.. ஞாயிறு மிஸ் பண்ணிடாதீங்க..கலெக்டர் முக்கிய அறிவிப்பு
கிருஷ்ணகிரி: இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 1.1.2026 தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஏதுவாக வருகிற 30-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, வேறு ஊர் மாறியவர்கள் இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1,150 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 1.1.2026 தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஏதுவாக வருகிற 30-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தகுதியான நபர்கள் படிவம்-6 உடன் உறுதிமொழி படிவத்தை சமர்ப்பித்து தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். கடந்த மாதம் 19-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் எவரேனும் விடுபட்டு இருந்தால் வருகிற 30-ந் தேதி வரை ஆட்சேபனை மற்றும் உரிமைகோரல் காலத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாவட்டத்தில் உள்ள 1,150 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே தகுதியான நபர்கள் அருகில் உள்ள தங்களது வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரடியாக சென்று, புதிதாக பெயர் சேர்த்தல் படிவம் 6, பெயரை நீக்குதல் படிவம் 7, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்தல் போன்றவற்றிற்கு படிவம் 8, போன்ற படிவங்களை பெற்று பூர்த்திசெய்து வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்களை சேர்த்துகொள்ளலாம். இறுதி வாக்காளர் பட்டியல் 17.02.2026 அன்று வெளியிடப்படும்.
மேலும், வாக்காளர்கள் தாங்கள் வீட்டிலிருந்தே விண்ணப்பிக்க ஏதுவாக https://voters.eci.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாகவும், செல்போன்களில் Voters Helpline App செயலியினை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு தேவையான விவரங்கள் பெறலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications