4 அதிமுக.. "அந்த" 2 பேர் இப்போ பாஜக பக்கம்... அரசு இனி ஜாக்ரதையா இருக்கணும்.. திருமாவளவன் ஒரே போடு
விசிக தலைவர் திருமாவளவன் பாஜக குறித்தும், அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை குறித்தும் பேட்டி தந்துள்ளார்
கிருஷ்ணகிரி: எதிர்கட்சியாக கூட அதிமுக களத்தில் இல்லை என்றும், திமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவன் கட்டாயம் வெற்றி பெறுவார் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் திருமாவளவன் தந்த பேட்டியில், "இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து விடுலை சிறுத்தை கட்சி தீவிரமாக வாக்கு சேகரித்து வருகி்றது...
அவர் வெற்றி உறுதி.. குறைந்தது 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று நம்பிக்கை உள்ளது.. ஆனால், அதிமுகவை பொறுத்தவரை இரட்டை இலை சின்னம் என்கிற ஒரே ஒரு சாதகமான விஷயம் இருக்கிறது..

மாயத்தோற்றம்
மற்றபடி அக்கட்சி எதிர்கட்சியாக கூட களத்தில் இல்லை என்பது தான் நிஜம்.. இதனால் திமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவன் கட்டாயம் வெற்றி பெறுவார். பாஜகவை சார்ந்தவர்கள், ஜாதி மற்றும் மதத்தை தூண்டுவதும், தேசிய தலைவர்களை அவமதிப்பதும், திருவள்ளுவர் போன்ற இலக்கிய ஆளுமைகளை மதம் எனும் பெயரில் அடையாளப்படுத்த முயற்சிப்பதும், திட்டமிட்ட அரசியல் நடவடிக்கைகளாகவே இருக்கிறது.. தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு விசிகவினால் ஆபத்து உள்ளதை போல் தோற்றத்தை உருவாக்கி, கீழ்தரமான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்...

வெட்ட வெளிச்சம்
அது தொடர்பாகவும் புகார் தந்துள்ளோம்.. ஆனால், விசாரணையில், அவரே தன்னுடைய வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசியதும், அது வெடிக்கவில்லை என்பதும் வெட்டவெளிச்சமாகி உள்ளது. அதேபோல் தான் பாஜகவினர் வட இந்திய மாநிலங்களில் இந்து கோவில்களில் மீது வெடிகுண்டு வீசிவிட்டு, இஸ்லாமியர்கள்தான் வீசினார்கள் என்று பழி சுமத்தி இந்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் மோதல் உண்டுபண்ணி உள்ளனர்.. இதற்கும் ஏராளமான சான்றுகள் இருக்கின்றன..

ஏவல் பாஜக
இதேபாணியை, இங்கு தமிழ்நாட்டிலும் கடைபிடிக்க பார்க்கிறார்கள்.. ஆனால், அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்... பொது மேடைகளில் 4ம்கட்ட பேச்சாளர் மாதிரி, கீழ்தரமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.. இதை எல்லாம் அரசு வேடிக்கை பார்க்ககூடாது. சமூக பதட்டத்தை தூண்டிவிட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து குளிர்காய பார்க்க நினைக்கும் சங்பரிவார் கும்பலை அடையாளம் கண்டு தடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் பாஜக கட்டுபாட்டிற்கு சென்றுவிட்டது.. ஹைகோர்ட், சுப்ரீம்கோர்ட் போன்றவை கூட சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை இருக்கிறது.. வருமானவரித்துறை, அமலாக்கதுறை, சிபிஐ போன்றவையும் பாஜக அரசின் ஏவலுக்கு வேலை செய்யும் துறைகளாக மாறி விட்டன..

4 அதிமுக
அதனால் தான் குஜராத் கலவரத்திற்கும், கோத்ரா ரயில் சம்பவத்திற்கும் மோடி தான் காரணம் என ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி அலுவலங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.. புலனாய்பு துறை அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட்டால் தான், உண்மைகளை வெளியே கொண்டு வரமுடியும்...,. தங்களுக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்று வித்தியாசம் பார்க்காமல் அச்சுறுத்தாமல் இருக்க வேண்டும்.. தமிழகத்தில் அதிமுக 4 ஆக உடைந்துள்ளது.. இதை உடைத்தது பாஜகதான்.. ஓபிஎஸ், எடப்பாடி 2 பேரையுமே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டிப்படைக்கிறது பாஜக..

ஷிண்டே சின்னம்
இரட்டை இலை சின்னம் வழக்கில் இப்போதைய நிலையில் மோடி அரசு எடப்பாடிக்கு ஆதரவாக நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.. மோடி அரசு சலுகையில் தான் எடப்பாடிக்கு தற்காலிகமாக இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது... இதே போல் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து ஷிண்டேவிற்கு வில்அம்பு சின்னம் மற்றும் கட்சி உரிமையையும் தேர்தல் ஆணையம் வழங்கி இருக்கிறது.. இது முழுக்க மோடி, சங்கபரிவார் அமைப்பின் தலையீடு என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இதெல்லாம் ஜனநாயகத்துக்கு நல்லது கிடையாது என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications