சுரண்ட சுரண்ட விஷம்..தர்பூசணி தான் தப்புனு பாத்தா..ஆப்பு வைக்குதே ஆப்பிள்! கிறுகிறுத்த கிருஷ்ணகிரி.!

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே செயற்கை முறையில் ரசாயனம் கலந்து சிகப்பு நிறத்தில் விற்பனை செய்யப்பட்ட தர்பூசணி பழங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் அதே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆப்பிள் பழங்களில் மெழுகு பூசி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில் 11 கடைகளில் மெழுகு பூசி விற்பனை செய்யப்பட்ட ஆப்பிள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதுவும் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்கின்றனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

தமிழ்நாட்டில் கோடை காலம் ஏப்ரல் மே மாதங்களில் தான் என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக ஜனவரி மாதத்தில் இருந்து வெயில் கொளுத்தி வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரலாற்றில் இல்லாத அளவு வெப்பநிலை அதிகரித்த நிலையில், மார்ச் முதல் இரு வாரங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Krishnagiri Health food safty

இந்த நிலையில் தற்போது மீண்டும் வெயில் அதிகரித்திருக்கும் நிலையில் பொதுமக்கள் தாகம் தீர்க்க குளிர்பானங்களையும் தர்பூசணி உள்ளிட்ட பழங்களையும் நாட தொடங்கி இருக்கின்றனர். இதை அடுத்து தமிழக முழுவதும் சாலையோரங்களில் திடீர் குளிர்பான கடைகளும், பழங்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யும் தற்காலிக கடைகள் அதிக அளவில் முளைத்திருக்கிறது.

தாகத்தை உடனடியாக தீர்க்கும் என்பதாலும், விலை குறைவு என்பதாலும் மக்கள் தர்பூசணி பழங்களை அதிகம் விரும்புகின்றனர். தர்பூசணி பழங்கள் பெரிதாகவும் பார்க்க சிகப்பாக இருந்தால் மக்கள் ஆர்வமாக வாங்குவார்கள் என்பதால் சிலர் அதில் ரசாயன கலப்பு செய்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. குறிப்பாக ஊசி மூலம் எரித்ரோசின் என்ற ரசாயனத்தை தர்பூசணி பழங்களில் செலுத்தும் போது அது நன்கு ரத்த சிவப்பாக மாறுகிறது. மேலும் இனிப்புக்காக சாக்கரின் உள்ளிட்ட கூடுதல் ரசாயனங்களை சேர்ப்பதாக சொல்லப்படுகிறது.

இதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நகரின் பல்வேறு பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் சாலையோரங்களில் விற்பனை செய்யும் தர்பூசணி கடைகளில் ஆய்வு செய்தனர். அதில் கூடுதல் நிறம் மற்றும் சுவைக்காக ரசாயனம் கலந்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து 8000 கிலோ தர்ப்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும் ரசாயனம் கலந்து பழங்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அதே கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி தரும் விதமாக ஆப்பிள் பழங்களை பளபளப்பாக வைக்க மெழுகு தடவி விற்பனை செய்தது தெரிய வந்திருக்கிறது. சாலையோர கடைகளில் ஆப்பிள் உள்ளிட்டவை விற்பனை செய்யும் நிலையில் அவற்றில் மெழுகு பூச்சி இருப்பதாக பொதுமக்கள் சிலர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து ஓசூர் ராமநாயக்கலனேரி பகுதியில் 21 பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் 11 கடைகளில் ஆப்பிள் உள்ளிட்ட பழங்களில் மெழுகு பூசி விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. பொதுவாக வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள் பழங்கள் ஒரே வாரத்தில் கெட்டுப் போய்விடும். அதனை மாத கணக்கில் பாதுகாக்க மெழுகு பூசப்படுகிறது. அவ்வாறு மெழுகு பூசும்போது கிட்டத்தட்ட ஆறு மாதம் வரை அந்த பழங்கள் அழுகிப் போகாது என்கின்றனர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள். தொடர்ந்து ஆப்பிள் பழங்களை சுரண்டிய போது அதிலிருந்து மெழுகு அதிக அளவில் வந்தது.

இதை அடுத்து அந்த கடைகளுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறுகின்றனர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள். அதே நேரத்தில் மெழுகு கலந்த ஆப்பிள் பழங்களை அப்படியே சாப்பிட்டால் அது இரைப்பை மற்றும் குடலில் படிமானமாக படிந்து விடும். தொடர்ந்து வயிற்று வலி, வாந்தி, பேதி உள்ளிட்டவை ஏற்படுவதோடு நீண்ட காலம் பயன்படுத்தும் போது கேன்சரை கூட உருவாக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.

ஆப்பிள் வாங்கும் போது உடனே அதனை சுரண்டி பார்த்து வாங்குவதும் ஒருவேளை வீட்டுக்கு வந்த பின்பு மெழுகு இருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டால் தோலை நீக்கிவிட்டு சாப்பிடலாம். அல்லது கொதிக்கும் நீரில் போட்டு மெழுகு வெளிவந்தவுடன் சாப்பிடுவது நல்லது என்கின்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள். மேலும் ஆப்பிள்களை மொத்தமாக விற்ற நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் ஆப்பிள் மீது மெழுகு கலந்து விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்து இருக்கின்றனர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+