கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்திய வாகனம்.. ஏலத்தில் ட்விஸ்ட்.. டிரைவர் செயலால் ஆடிப்போன போலீஸ்
கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அரகாசனஅள்ளியை சேர்ந்தவர் மாதேஸ் என்பவர் லாரி டிரைவர் ஆவார். இவர் கடந்த ஆண்டு சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி வந்தாக கடந்த ஆண்டு கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் சிக்கிய இவரது வாகனத்தை வேறு நபர் ஏலம் எடுத்ததால் போலீஸ் நிலையம் அருகில் இவர் செய்த செயல் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது.
கர்நாடகா மாநில எல்லையில் உள்ள தர்மபுரி , கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. அப்படி ரேஷன் அரிசி கடத்துவோர் கைதாகிறார்கள். அவர்கள் கைது செய்யப்படுவதுடன் அவர்களது வாகனத்திற்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.சில நேரங்களில் ஏலம் கூடவிடப்படும். இது பொதுவான நடைமுறை தான்.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அரகாசனஅள்ளியை சேர்ந்தவர் மாதேஸ் (வயது 40). டிரைவர். இவர் கடந்த ஆண்டு சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி வந்தார் என கூறப்படுகிறது. அப்போது கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்து சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் மாதேஸ் விடுவிக்கப்பட்டார்.'
இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனத்தை கடந்த 30-ந் தேதி ஏலம் விடுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த வாகனத்தை தானே வாங்கி கொள்வதாக போலீசாரிடம் டிரைவர் மாதேஸ் கூறி வந்திருக்கிறார். ஆனால் ஏலத்திற்கு மாதேஸ் வர தாமதமனதால் அந்த வாகனத்தை வேறு ஒருவர் ரூ.65 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்துவிட்டார்.
இதனால் மனமுடைந்த மாதேஸ், கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நிலையம் அருகில் டீசலை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் கருகிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாதேஸ் நேற்று பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரேஷன் அரிசி கடத்தலில் சிக்கிய லாரியை மீட்க முடியாததால் லாரி டிரைவர் உயிரை மாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications