கிருஷ்ணகிரி விபத்து: காரணம் சிலிண்டரா? பட்டாசா? வெளியாகும் முரண்பட்ட தகவல்கள்.. நீடிக்கும் குழப்பம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டையில் பட்டாசு குடோனில் கடந்த 29-ந் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள். இந்த விபத்துக்கு காரணம் சிலிண்டர் வெடிப்பா அல்லது பட்டாசு வெடித்தா? என்பது குறித்து குழப்பங்கள் இன்னும் நீடித்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டை என்ற இடத்தில் தனியார் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு சுமார் 15 பணியாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இந்தப் பட்டாசு குடோனில் கடந்த 29 ஆம் தேதி காலை 10 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருகிலிருந்த 3 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின.

இந்த பட்டாசு குடோன் உரிமையாளர் ரவி, அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ரூத்திகா, மகன் ரூத்திஸ், பட்டாசுக் கிடங்கு அருகிலிருந்த உணவகத்தின் உரிமையாளர் ராஜேஸ்வரி, இம்ரான், இப்ராஹிம் என 9 பேர் இந்த விபத்தில் பலியாகி உள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த விபத்துக்கு சிலிண்டர் விபத்தே காரணம் என்று தமிழக அமைச்சர் சக்ரபாணி கூறியிருந்தார்.
விபத்துக்கு என்ன காரணம்: ஆனால், மத்திய அரசு இந்த தகவலை முற்றிலும் மறுத்தது. நேற்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, கிருஷ்ணகிரியில் நடந்த பட்டாசு கடை வெடி விபத்திற்கு சிலிண்டர் வெடித்தது காரணம் கிடையாது. சிலிண்டர் தானாக வெடிக்காது. குடியிருப்பு பகுதியில் பட்டாசு கடை இருந்ததே விபத்திற்கு காரணம்.
வெடிமருந்து காரணமா?: வெடி விபத்து ஏற்பட்ட ஓட்டல் இருந்த பகுதிக்கு சமையல் சிலிண்டர் விநியோகமே செய்யப்படவில்லை" என்று கூறியிருந்தார். இதற்கு மத்தியில் கிருஷ்ணகிரியில் நிகழ்ந்த வெடி விபத்துக்கு காரணம் சட்ட விரோத கல் குவாரிகளுக்கான வெடி மருந்தை பதுக்கியதே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பட்டாசு கடை அருகில் செயல்பட்டு ஓட்டலில் இருந்து சிலிண்டர் வெடித்துதான் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினரும் கூறியுள்ள நிலையில், இதை முற்றிலுமாக அந்த ஹோட்டல் உரிமையாளர்களின் உறவினர்கள் மறுத்தனர்.
ஆனாலும் இந்த விவகாரத்தில் இன்னும் குழப்பங்கள் நீங்கியபாடில்லை. ஏனெனில், சிலிண்டர் வெடித்து முழு கட்டிடமும் தரைமட்டம் ஆகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதுபோக அப்பகுதி மக்கல் குவாரிகளுக்கு பதுக்கிய வெடி மருந்தே விபத்துக்கு காரணம் என்று குற்றச்சாட்டு முன்வைக்கிறார்கள். இதனால் விபத்துக்கான காரணம் தொடர்பாக சர்ச்சை நீடித்து வருகிறது.
நிபுணர் குழு ஆய்வு: இதற்கிடையே, தர்மபுரி தடயவியல் அறிவியல் நிபுணர் குழு இன்று சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். விபத்து நடைபெற்ற இடம், உடல்கள் தூக்கி வீசப்பட்ட தொலைவு உள்ளிட்ட தகல்களையும் சேகரித்தனர். சிலிண்டரால் விபத்து நடந்ததா? இல்லையா? சர்ச்சை நீடித்து வருகிறது. இதில் முழுமையான ஆய்வு அறிக்கை கிடைத்த பிறகே விபத்தில் நிலவும் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து இந்த விவகாரத்தில் குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், மாநில அரசு முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனிடையே, கிருஷ்ணகிரி வெடி விபத்து தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் அறிக்கை அளிக்குமாறு மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் விடுத்துள்ளது. ஆறுவாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications