அத்தை-ன்னுகூட பார்க்கலயே.. யாரிந்த பெண் சத்யா? ஊசலாடும் நாத்தனார் மகனின் உயிர்.. கலங்கிய கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 2 நபர்களை மிக கொடூரமாக கழுத்தை அறுத்து கொன்றிருக்கிறார்கள்.. இதில் ஒரு பெண் இறந்துள்ளார்.. யார் இவர்? என்ன நடந்தது? என்ற விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் டேம் ரோடு சின்னமுத்தூர் அருகே மேட்டு கொல்ல கொட்டாய் என்ற பகுதி உள்ளது.. இங்கு பழனி என்பவர் வசித்து வருகிறார்.. இவருக்கு 40 வயதாகிறது.. இவர் ஒரு கூலித்தொழிலாளி ஆவார். மனைவி பெயர் சத்யா.. இவருக்கு 36 வயதாகிறது.. திருப்பதி (18), கேசவன் (16) என்ற 2 மகன்கள் இந்த தம்பதிக்கு உள்ளார்கள்.

அக்கா மகன்: பழனியின் அக்கா, தர்மபுரி மாவட்டம் குண்டாங்காட்டையில் வசித்து வருகிறார்.. இவருக்கு 25 வயதில் மாரியப்பன் என்ற மகன் இருக்கிறார்.. இவர் சின்னமுத்தூர் பகுதியிலுள்ள பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்ததால், தாய்மாமன் பழனியின் வீட்டில் தங்கி வந்துள்ளார்.. அப்போதுதான், சத்யாவுக்கும், மாரியப்பனுக்கும் பழக்கம் அதிகமாகி, கள்ளக்காதலாக உருவெடுத்துள்ளது..
இந்த விஷயம் தெரிந்ததுமே பழனி கொந்தளித்து போனார். தன்னுடைய அக்கா மகனையும், சத்யாவையும் கண்டித்தார்.. அதேபோல, சத்யாவின் 2 பிள்ளைகளுமே, இதனை கண்டித்தார்கள்.. ஆனாலும் சத்யா கள்ளக்காதலை கைவிடவில்லை.
அலறல் சத்தம்: இந்நிலையில், பழனி நேற்று காலையில் வேலைக்கு சென்று விட்டார். அவருடைய 2 மகன்களும் வெளியே சென்று விட்டனர்.. அப்போது, சத்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்.. திடீரென மதியான நேரத்தில் அலறல் சத்தம் வீட்டிற்குள்ளிருந்து கேட்டுள்ளது.. இதனால், அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிச்சென்று சத்யா வீட்டிற்குள் பார்த்தனர்.
அங்கு கட்டிலில் சத்யா பிணமாகி கிடப்பதை கண்டு அதிர்ந்தனர்.. சத்யாவின் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது.. பக்கத்திலேயே மாரியப்பனும் கழுத்து அறுக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்... இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மாரியப்பன்: போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாரியப்பனை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு சத்யாவின் சடலத்தையும் மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.. இப்போது மாரியப்பனுக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது. ஆனால், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் அவரது நிலைமை சீரியஸாக இருப்பதாக சொல்கிறார்கள்.
ஆனால், இந்த கொலையை செய்தது யார் என்று தெரியவில்லை.. நேற்று மதியம் பழனியும், அவரது மகன்களும் வீட்டில் இல்லாத நேரத்தில், மாரியப்பனும், சத்யாவும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது..
குழப்பம்: அந்த நேரம் வீட்டுக்கு சத்யாவின் மகன்கள் வந்தார்களா? அல்லது பழனி வந்தாரா? அல்லது மாரியப்பனே சத்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தன்னுடைய கழுத்தையும் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தாரா? என்பது தெரியவில்லை.
ஆனால், பழனி தற்போது தலைமறைவாக உள்ளார்.. எனவே போலீசாரின் கவனம் அவர்மீது திரும்பியிருக்கிறது.. தற்போது அவரை தேடும் முயற்சியிலும், கொலையாளி யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணையை முடக்கி விட்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications