சச்சரவு வேண்டாம்! இருவருக்குமே அங்கீகாரம்! ஒசூர் மேயர் யார்? பரபரக்கும் மறைமுகத் தேர்தல்!
கிருஷ்ணகிரி: தமிழகத்தின் எல்லையோர மாநகராட்சியான ஒசூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.சத்யா மேயர் பதவிக்கான போட்டியில் முதலிடத்தில் இருக்கிறார்.
இதே போல் இதற்கு அடுத்தப்பதவியான துணை மேயர் பதவிக்கான போட்டியில் முன்னாள் நகர்மன்ற தலைவர் மாதேஷ்வரன் முன்னணியில் இருக்கிறார்.
இவர்கள் இருவருமே தனக்கு முக்கியம் என்பதால் சச்சரவின்றி அவர்களுக்கு மேயர், துணை மேயர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தக்கோரி பரிந்துரை செய்திருக்கிறார் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரகாஷ்.

ஒசூர் மாநகராட்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியானது தமிழக எல்லையில் அமைந்திருக்கும் ஒரு மாநகராட்சியாகும். அதோடு தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இந்த ஒசூரில் திமுகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதிக இடங்களை கைப்பற்றி மேயர் பதவியை கைப்பற்றியுள்ளது திமுக. இந்நிலையில் திமுக சார்பில் யார் மேயர் வேட்பாளர் என்பது தான் இப்போது எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.

எஸ்.ஏ.சத்யா
ஒசூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.ஏ.சத்யா தான் ஒசூர் மேயராக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் ஒசூர் மாநகராட்சியின் துணை மேயராக மாதேஷ்வரனுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இவர்கள் இருவருமே மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தளி பிரகாஷுக்கு நெருக்கமானவர்கள். இதனால் இவர்கள் இருவருக்குமே பதவிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கம்யூனிஸ்ட்
தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் ஒசூர் மாநகராட்சி மேயர் பதவியை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்த்ததாகவும் பிறகு அவர்களுக்கு வேறு மாநகராட்சிகளில் துணை மேயர் பதவி தரப்படும் என திமுக தலைமை உறுதி அளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலையோ அல்லது நாளையோ 138 நகராட்சி மற்றும் 21 மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதவியேற்பு
இதனிடையே இன்று காலை ஒசூர் மாநகராட்சி மன்றத்தில் கவுன்சிலராக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக உறுப்பினர்கள் பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நாளை இரவோ அல்லது நாளை மறுதினம் காலையோ அவர்கள் ஒசூர் அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications