நாத்தனார், அண்ணி, கொழுந்தியாள்.. எந்த உறவை பற்றியுமே யோசிக்கிறதில்லை.. இது கிருஷ்ணகிரி அக்கப்போரு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.. இது தொடர்பான விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
ஒரே குடும்பம் என்றுகூட பார்க்காமல், சொந்த ரத்த பந்தம் என்றும் பாராமல், குடும்ப உறவுகளின் அருமைகளையும் புரிந்து கொள்ளாமல், சில ஆபாச பேர்வழிகள், எல்லைகளை மீறி கொண்டு இருக்கிறார்கள்.

குடும்பம்: எத்தனையோ குடும்பங்களில் அண்ணன் மனைவி அண்ணியை, அம்மாவாக கருதும் மச்சினன்கள், மைத்துனர்கள் உண்டு.. அண்ணி என்பவர் இன்னொரு தாய் என்பதை நம் தமிழ்ச்சமூகம் அன்றிலிருந்து போற்றி வரும் நடைமுறை வழக்கமும்கூட..
நாகரீகம் மாறி வந்தாலும், விஞ்ஞான வளர்ச்சி பெருகி நிறைந்தாலும்கூட, அண்ணிக்குரிய மதிப்பு என்றென்றும் நம் குடும்பங்களில் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனாலும், ஒருசிலரின் ஆபத்தான சிந்தனை, அந்த குடும்பத்தையே நாசம் செய்துவிடுகிறது. இது நம் தமிழ்நாட்டிலும் நடப்பது வேதனைதான்.
விழுப்புரம்: சமீபத்தில்கூட, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கொடுமை ஒன்று நடந்தது.. அண்ணன் - தம்பி இருவருமே பூம் பூம் மாட்டுக்காரர் இனத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.. இருவருமே திருமணமானவர்களும்கூட..
இதில் தம்பி வீரமுத்துவுக்கு சபல புத்தி இருந்து வந்துள்ளது.. இதனால், தன்னுடைய அண்ணன் மாரிமுத்து மனைவிக்கு அதாவது தன்னுடைய அண்ணிக்கே வீரமுத்து அடிக்கடி பாலியல் தொல்லை தந்து வந்தாராம்.. பலமுறை தன்னுடைய தம்பியை மாரிமுத்து எச்சரித்தபோதும்கூட, பாலியல் சேட்டைகள் குறையவில்லையாம்.. அதனால்தான், தம்பியை சரமாரியாக குத்தி கொன்றுவிட்டார் மாரிமுத்து. இப்போது வீரமுத்துவின் அண்ணன் மாரிமுத்து ஜெயிலில் உள்ளார்.
கிருஷ்ணகிரி: இதோ கிருஷ்ணகிரியிலும் ஒரு அசிங்கம் நடந்துள்ளது.. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சாலிகொக்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாபு, மூர்த்தி.. பாவுக்கு 32 வயதாகிறது.. மூர்த்திக்கு 30 வயதாகிறது.. இருவருமே கட்டிட தொழிலாளிகள்.
பாபு கோவையிலும், மூர்த்தி உள்ளூரிலும் வேலை செய்து வருகிறார்கள். இதில் அண்ணன் பாபுவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.. ஆனால், கோவையில் இருந்து அடிக்கடி சொந்த ஊருக்கு வரும்போதெல்லாம், தம்பி மனைவியான மஞ்சுளாவிடம் சில்மிஷம் செய்து, தகாத உறவிற்கு அழைத்து வந்தாராம்.
அண்ணன்: இதனால் அதிர்ச்சி அடைந்த மஞ்சுளா, தன்னுடைய கணவர் மூர்த்தியிடம் இதை பற்றி முறையிட்டிருக்கிறார்.. ஆனால், இந்த விஷயத்தில் அண்ணனை எப்படி கண்டிப்பது என்று தெரியாமல் கையை பிசைந்து நின்றுள்ளார் மூர்த்தி..
இதனால் மேலும் கோபப்பட்ட மஞ்சுளா, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோபித்துக்கொண்டு தன்னுடைய அம்மா வீட்டிற்கே சென்று விட்டார்.. இந்நிலையில், நேற்று முன்தினம் போதையில் வீட்டிற்கு வந்துள்ளார் பாபு.. அப்போது வேண்டுமென்றே மூர்த்தியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த மூர்த்தி, இந்த தகராறு முற்றியதையடுத்து, தடியால் சரமாரியாக தாக்கி பாபுவை அடித்தே கொன்றுவிட்டார்.
கொடுமை: பிறகு அண்ணனின் சடலத்தை ஒரு சாக்கு பையில் கட்டி வீட்டிற்கு பக்கத்திலுள்ள கிணற்றிலும் வீசிவிட்டார்.. இதற்கு பிறகு அந்த பிணம் அழுகி, ஊருக்குள் துர்நாற்றம் எடுக்க துவங்கியது.
இதனால் அச்சமடைந்த அந்த பகுதி மக்கள், மத்தூர் போலீஸில் புகார் செய்ததையடுத்து, போலீசாரும் சம்பந்தப்பட்ட கிணற்றில் என்ன இருக்கிறது? என்று ஆய்வு செய்தனர். அப்போதுதான், கிணற்றில் சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் கிடந்த பாபு உடல் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. இப்போது மூர்த்தி கைதாகி சேலம் சிறையில் உள்ளார்..!
உறவுமுறை தெரியாத ஆசாமிகளுக்கு, பச்சிளம் குழந்தையும் ஒன்றுதான், பல்லு போன பாட்டியும் ஒன்றுதான்.. உறவுமுறைகள் எதுவானால் என்ன? வயது வித்தியாசம் எப்படியிருந்தால் என்ன? அது பெண்ணாக மட்டுமே இருந்தால் போதும் என்று நினைக்கும் போதையாளர்களை என்ன செய்வது??












Click it and Unblock the Notifications