ஃபுல் போதை, வாய் சண்டை.. அதற்கு பிறகு தூயமணி செய்தது இருக்கே.. ரொம்ப புதுசு!
மதுபோதையில் பஸ்ஸை மறித்து தகராறு செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

கிருஷ்ணகிரி: தண்ணிய மட்டும் அடிச்சிட்டா, அதுவும் போதை தலைக்கு மட்டும் ஏறிட்டா... அவ்வளவுதான்... டிசைன் டிசைனா தகராறுகள் வெளியே வரும். அப்படி ஒ குடிமகனின் அமர்க்களம்தான் இது!!
போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் தூயமணி. வயசு 28. இவருக்கு கல்யாணம் ஆகி மனைவியும் ஒரு வயசில் குழந்தையும் உள்ளனர்.

போதையில் தூயமணி
இந்நிலையில் நேற்று இவர் தனது மனைவியும், குழந்தையையு பைக்கில் உட்கார வைத்து கொண்டு போச்சம்பள்ளியில் மளிகை சாமான்களை வாங்கி கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது தூயமணி மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. மனைவி குழந்தைகளை வைத்து கொண்டு, மளிகை சாமான்களையும் வைத்து கொண்டு ஏற்கனவே கஷ்டப்பட்டுதான் பைக் ஓட்டி வந்து கொண்டிருந்தார்
[வெட்கம், மானம், ரோஷத்தை விட்டாதான் இங்க வேலை பார்க்க முடியும்!]

தொடர்ந்து ஹாரன்
அப்போது இவர்களது பைக்குக்கு பின்னால் வேறு 2 இளைஞர்கள் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அது திருப்பத்தூர்- தருமபுரி தேசிய நெடுஞ்சாலை என்பதால் டிராபிக் அதிகமாக இருந்தது. பின்னால் வந்த இளைஞர்களோ, தொடர்ந்து ஹாரன் அடித்து கொண்டே வந்தனர். முதலில் ஹாரனை கண்டுகொள்ளாத தூயவன், தொடர்ந்து அந்த இளைஞர்கள் ஹாரன் அடிக்கவும், போதையுடன் கோபம் குப்பென்று இன்னும் ஏறிவிட்டது.

தொடர்ந்த தகராறு
உடனே பைக்கை நிறுத்திவிட்டு கீழே இறங்கிவிட்டார் தூயமணி,. அவர்களுடன் சண்டைக்கும் போய்விட்டார். இரு தரப்பினரும் பலமாக முட்டிக் கொண்டனர். சாலையில் பொதுமக்கள் எல்லாரும் இந்த சண்டையை வேடிக்கை பார்க்க கூடிவிட்டனர். தகராறு ஓயாமல் போய்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில், தூயமணி, திடீரென்று எதிர்பக்கமாக ஓடினார்.

டயரை பிடித்து கொண்டார்
அங்கே வந்து கொண்டிருந்த தனியார் பஸ்ஸை நிறுத்தினார். பஸ்ஸில் தூயமணி ஏற போகிறார் என்று நினைத்து டிரைவரும் வண்டியை நிறுத்தினார். ஆனால் தூயமணி பஸ்-க்கு அடியில் போய் படுத்து கொண்டார். அதோடு விட்டாரா, பஸ்ஸில் முன்பக்கமாக உள்ள டயரை கெட்டியாக பிடித்து கொண்டார். இப்போது டிரைவருக்கு வண்டியை எடுக்கவும் முடியாத நிலை வந்துவிட்டது.

ஒரு மணி நேரம்
உள்பக்கமாக படுத்து கிடப்பதால் யாராலும் சரியாக பேசவும் முடியவில்லை. பஸ் நடுவழியில் நின்றுவிட்டதால் டிராபிக் ஜாம் ஆகிவிட்டது. இப்படியே பஸ்சுக்கு அடியில் டியரை கெட்டியாக பிடித்துகொண்டு 1 ஒரு மணி நேரம் படுத்திருந்தார் தூயமணி. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு தூயமணி நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் ஒன்றுசேர்ந்து விட்டார்கள்.

வழக்கு பதிவு
எல்லோரும் தூயமணியை வெளியே வருமாறு கூறினார்கள். ஆனாலும் அவர் வரவில்லை. இதையடுத்து போச்சம்பள்ளி போலீசார் விரைந்து வந்து., தூயமணியை வெளியே இழுத்து போட்டார்கள். பிறகு அவரை குண்டுகட்டாக ஸ்டேஷன் வரை தூக்கிகொண்டு போனார்கள். அப்பறமென்ன... வழக்கு பதிவுசெய்து, தூயமணி மீது விசாரணை போய்க் கொண்டு இருக்கிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications